ஆஃப் த ரெக்கார்டு!

நடிக்க வந்ததில் இருந்தே நம்பர் த்ரீ நடிகையுடன் நடிக்க வேண்டும் என்பது வெற்றி நடிகரின் ஆசையாம். இப்போது நடித்துவரும் படத்தில் முதலில் ஹீரோயினாக அவரையே ஒப்பந்தம் செய்தனர். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, படத்தில் அவர் இல்லை. விடாமுயற்சியாக அடுத்த படத்தில் அவர் நடித்தாக வேண்டும் என தயாரிப்பாளரையும் இயக்குநரையும் நிர்ப்பந்தித்தாராம் வெற்றி!

‘என்னதான் வசூலைக் குவித்தாலும் இயக்குநரின் சரக்கு குறைந்துவிட்டது. பாடகிப் பெயர்கொண்ட எழுத்தாளர் இல்லாத குறை அப்பட்டமாகத் தெரிகிறது’ என்று வரும் விமர்சனங்கள் இயக்குநரைப் பிரமாண்டமாக யோசிக்க வைத்துள்ளதாம். விளைவு தற்போது வைத்துள்ள ஸ்கிரிப்டுகளை மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறாராம்!

‘கவர்ச்சி பாம்’ என்று அழைக்கப்படும் மலையாள நடிகை தமிழ்ப் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார். அதன்பின் காணாமல் போனவர் திடீரென்று திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் பரவியது. அவர் மறுத்தாலும் அது உண்மைதான் என்கிறது சினிமா வட்டாரம். அவர் மணந்திருப்பது கேரள தொழிலதிபரையாம்! 

 எட்டு வருடங்களுக்கு முன்பு நம்பர் நடிகையுடன் இணைந்து நடித்த உயிர் நடிகர், மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தாராம். சமீபத்தில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தபோது ‘இரண்டரை கோடி சம்பளம் வேண்டும்’ என்று நம்பர் நடிகை குண்டைத் தூக்கிப் போட, தயாரிப்புத் தரப்போ ஹீரோ மார்க்கெட் இறங்கு முகத்தில் இருப்பதால், ஹீரோயினுக்கு அவ்வளவு கொடுக்க முடியாது என்று கூறிவிட ஹீரோவின் முகத்தில் ஈ ஆடவில்லையாம்!

தெலுங்குத் திரையுலகில்  ‘லாடம்’ நடிகை, மசாலா இயக்குநருடன் ஒன்றாக சுற்றுகிறாராம். இருவரும் காதலிக்கிறார்கள் என தீயாய் தகவல் பரவ தடாலடியாய் மறுத்துள்ளார் நடிகை. ‘அவர் என் இயக்குநர், கதையைப் பற்றிப் பேசவே அவரை அடிக்கடி சந்தித்து வந்தேன், அவருக்கும் குடும்பம் இருக்கிறது, எனக்குக் காதலிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை’ என்றாராம்!

வாய்ப்புகள் குறைந்து போனதால், படங்களில் தாராளமயம் காட்டத் தொடங்கியிருக்கிறார் ஸ்வீட் ஸ்டால் நடிகை. சமீபத்தில் ஒரு தெலுங்குப் படத்தில் இவர் நடித்த ஜாக்கெட்டைக் கழற்றி பின்புறத்தைக் காட்டும் காட்சியைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் கட் செய்ய கத்தரியை எடுத்துவிட்டார்களாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!