ஆஃப் த ரெக்கார்டு!

யிலு நடிகையின் மைத்துனர் மகளும் ஒரு பிரபல நடிகைதான். சமீபத்தில் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டபோது கழுத்தில் போட்டிருந்த சில லட்சங்கள் மதிப்புள்ள வைர நெக்லெஸ் மாயமாகிவிட்டதாம். எல்லாம் தெளிந்து எழுந்தபோதுதான் நெக்லெஸ் மாயமானதை உணர, வீட்டில் இருந்த வேலைக்காரர்களை சந்தேகப்பட்டு ஏக வசனத்தில் வாங்கிவிட்டாராம். போலீஸ் வந்து விசாரித்தும் நெக்லஸ் கிடைக்கவில்லையாம்! 

னந்தமான நடிகையிடம் அறிமுகப்படுத்தும்போதே ’உனக்கு கவர்ச்சி சரி வராது, அப்படி நடிக்க முயற்சிக்க வேண்டாம்’ என்று அட்வைஸ் செய்தாராம் ஆனை இயக்குநர். ஆனால் தற்போது வாய்ப்பு கொடுப்பவர்கள் கிளாமர் ரோல் கொடுப்பதாலும் எடை கூடும்படி கேட்டுக்கொள்வதாலும் தன் குருவின் அட்வைஸை காற்றில் பறக்க விட்டுவிட்டாராம் ஆனந்தம்!

மெரிக்காவில் செட்டில் ஆன பூஜை நடிகையை மீண்டும் நடிக்க அழைத்து வந்தார் வேர்ல்டு ஹீரோ. அப்படி அவரோடு இணைந்து அவர் நடித்த படங்களில் முதல் படத்தைத் தவிர மற்ற படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. சில வாய்ப்புகள் வந்தாலும் வேறு படங்களில் நடிக்கும் ஆசைக்கு நடிகரின் அனுமதி இல்லாததால், அவர் வார்த்தையை மீற முடியாமால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பறந்து கொண்டிருக்கிறாராம் நடிகை!

மூன்று படங்கள்கூட வரவில்லை. நடித்த ஒரு படம்கூட ஹிட்டாகவில்லை. ஆனால் சம்பளம் மட்டும் ஒரு கோடி கேட்டு தயாரிப்பாளர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறாராம் அலைவாரிசு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!