கமலின் அடுத்தப் படத்தை இயக்குகிறாரா பிரபுதேவா? | prabhu deva, kamalhassan, பிரபுதேவா, கமல்ஹாசன்

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (02/03/2015)

கடைசி தொடர்பு:14:56 (02/03/2015)

கமலின் அடுத்தப் படத்தை இயக்குகிறாரா பிரபுதேவா?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு அடுத்தடுத்து படங்கள் வெளிவரவிருக்கின்றன. ’விஸ்வரூபம்’ படத்திற்குப் பிறகு ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவிருக்கும் படம் ’உத்தமவில்லன்’. அதற்கான பாடல்களும், டிரெய்லர்களும் நேற்று (01/03/2015) வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது.

கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி,  ரமேஷ் அரவிந்த் இயக்கும் இப்படம் இரண்டு காலக் கட்டத்தில் நடக்கும் கதையாம். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பூஜா குமார், ஆன்ட்ரியா, பார்வதி மேனன், நாசர், மற்றும் கே.விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்குநர் கே.பாலசந்தர் நடித்த கடைசிப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கிறது.

இந்த ஆண்டு மட்டும் கமல்ஹாசனுக்கு ’உத்தமவில்லன்’ மற்றும் அதைத் தொடர்ந்து “பாபநாசம்”,“விஸ்வரூபம் 2” வெளிவரவிருக்கிறது. தற்போது கமலின் அடுத்தப் படம் பற்றியான தகவல்கள் கசிய துவங்கியுள்ளது.

கமலை வைத்து பிரபுதேவா இயக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கமல்ஹாசன் மொரீஷியஸ் தீவுக்கு லொகேஷன் பார்க்க சென்றது இந்த படத்திற்கு தானா? என்பதற்கான விடையும், பிரபுதேவா கமலை இயக்கவிருப்பது பற்றியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் மற்றும் பிரபுதேவா இருவரும் “காதலா காதலா” படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close