ஆஃப் த ரெக்கார்டு! | nayanthara, amy jackson, surya, gossip, tamil cinema, kisukisu, நயன்தாரா, எமி ஜாக்சன், சூர்யா, கிசுகிசு

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (04/03/2015)

கடைசி தொடர்பு:17:53 (04/03/2015)

ஆஃப் த ரெக்கார்டு!

சமீபத்தில் திரைக்கு வந்த நம்பர் படத்தில் தன்னுடன் நடித்த நடிகருக்கு தன்னைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகக் கூறி படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவேயில்லையாம் ‘ரூட்டு’ நடிகர்!

‘நம்பர்’ நடிகையோடு இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் ஹீரோவான ‘சூது’ நடிகரைவிட நாயகியையே விழுந்து விழுந்து கவனிக்கிறார்களாம். நாயகனையும், அவரோடு வருபவர்களையும் கண்டு கொள்வதில்லையாம். இதனைப் பார்த்து தனது சகாக்கள் பொங்க, ‘பிரச்னை வேண்டாம், தயாரிப்பாளர் மனசுதான் கஷ்டப்படும்’ என கூறிவிட்டாராம் சூது!

அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஹிட் அடித்துள்ளதால், ‘ஒல்லிப்பிச்சான்’ நடிகர் தனது சம்பளத்தை பதினைந்து கோடிகளாக உயர்த்தியுள்ளாராம். போன வருடம் இந்தச் சம்பளத்தில் பாதியைக்கூட தர யோசித்த தயாரிப்புகள் இப்போது எந்தவித மறுப்பும் இல்லாமல் காசோலையை நீட்டுகிறார்களாம்!

வளரும் நடிகர்களுடனே தொடர்ச்சியாக ஜோடி சேரும் ‘பிரியமான’ நடிகைக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லையாம். காரணம், ‘அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும் சம்பளத்தை ஏற்றிக்கொண்டே போகிறார்’ என்கிறார்கள்!

‘பன்ச்’ நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க ‘நம்பர்’ நடிகை மறுத்துவிட்டாராம். அதே படத்தில் ‘வெள்ளைக்கார’ அம்மணியும் நடிப்பதுதான் காரணமாம். இதற்கு முன் ‘பிரகாச’ நடிகர் படத்தில் இருந்து இங்கிலீஷ் அம்மணி கழட்டி விடப்பட்டதற்கும் நம்பர்தான் காரணமாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close