ஆஃப் த ரெக்கார்டு!

இலங்கையில் ஆட்சி மாறுவதற்கு முன்பு வரை இந்தியா அங்கே போய் விளையாடக் கூடாது என்றெல்லாம் கோஷங்கள் எழுந்தன. தற்போது கோஷங்கள் இல்லை என்பதால், அங்கே போய் படப்பிடிப்பை நடத்தலாம் என முடிவெடுத்த பிரகாச நடிகர் இலங்கைக்குப் போய் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்துள்ளாராம். நேரடியாகச் செல்லாமல் ஹைதராபாத் போய் அங்கிருந்து இலங்கை போனதாகத் தகவல்கள் கசிகின்றன!
 

மிழில் நடிக்க மாட்டேன் என ‘பந்தா’ காட்டியும், தெலுங்கில் வந்த வாய்ப்புகளை இந்திப் படங்களைக் காரணம் காட்டி மறுத்த ‘ஒல்லி பெல்லி’ நடிகைக்கு தற்போது எந்த மொழியிலும் பட வாய்ப்புகளே இல்லையாம். அதனால் குத்துப் பாடலுக்குக்கூட ஆட ரெடி என இறங்கிவிட்டாராம்!

டம் வெற்றி, தன் பிறந்தநாள் கொண்டாட்டம் என சந்தோஷத்தில் இருந்த புத்த இயக்குநர், கிடப்பில் கிடந்த படத்தை ஆரம்பிக்க, வழக்கம்போல் முதல் நாளே மாயமான விரல் நடிகர், நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட இயக்குநர் ‘இனிமே அவர் ஷூட்டிங் வரலைனா, படத்தை டிராப் பண்ணிடுவேன். எனக்கு அதனால நஷ்டம் கிடையாது’ என்று ஆங்கிலத்தில் வசைபாடினாராம்! 
 

யர நாயகியுடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்று துடிக்கிறாராம் இசையிலிருந்து நடிப்புக்குத் தாவிய பாட்ஷாவின் எதிரி. பெரிய சம்பளமாக இருந்தாலும் அம்மணியை வளைத்துப் போட, ரெடியாக உள்ளாராம்!

சில மாதங்களுக்கு முன் வசந்தமான படம் தொடர்பாகத் தயாரிப்பாளருடன் பிரச்னையில் சிக்கிய சூது நடிகர் தற்போது மனமிறங்கி வந்துள்ளாராம். ரெளடி படத்தை முடித்த கையோடு அந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!