ஓப்பனாக நடிப்பதில் என்ன தவறு! ராதிகா ஆப்தே பகீர் ஸ்டேட்மெண்ட்

பிரகாஷ்ராஜுடன் “தோனி “ படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் “ராதிகா ஆப்தே”. பல தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் கதைக்கு ஏற்ற கதாப்பாத்திரம் ஏற்று நடிப்பவர்.

கார்த்தியுடன் “ஆல் இன் ஆல் அழகுராஜா”  மற்றும் மலையாளத்தில் பகத் ஃபாசிலுடன் “ஹரம்” படத்திலும் கதாநாயகியாக நடித்தவர். தற்பொழுது இந்தியில்  “ஹண்டர்” என்ற முழு நீள செக்ஸ் காமெடி படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் மிக கவர்ச்சியாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

ராதிகா அப்தேவின் ஆபாச புகைப்படங்கள் வாட்ஸ் ஆப்பிலும், இணைய தளங்களிலும் காட்டுத் தீயாக பரவியது குறிப்பிடத்தக்கது. படுக்கையறையில் இருப்பது போன்ற இந்தப் படத்தில் நான் இல்லை என்று அவர் மறுத்தும் வந்தார்.

“நம் சமூகத்தில் செக்ஸ் தவறாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவும் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று. நம்முடைய ஹெல்த்துக்கு உணவு எப்படி முக்கியமோ அதுபோல செக்ஸ் அவசியம். உடம்பையும் நன்றாக வைத்துக் கொள்ளும். மேலும் அப்படி கதைக்கு ஏற்ற பாத்திரத்தில் நடிப்பது தவறில்லை என்று கூறியுள்ளார் ராதிகா ஆப்தே. தற்போது ‘ஹண்டர்’ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ராதிகா அப்தேவை செக்ஸ் நாயகி என பலரும் கூற அதற்கு பதிலாகவே அவர் இதை கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!