ஆஃப் த ரெக்கார்டு! | off the record, ஆஃப் த ரெக்கார்டு,

வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (23/03/2015)

கடைசி தொடர்பு:15:58 (25/03/2015)

ஆஃப் த ரெக்கார்டு!

மத்தான நடிகையின் மீது ஏகப்பட்ட புகார் பட்டியல் வாசிக்கிறார்கள். தனக்கென சமைக்க ஒரு சமையல்காரரை அழைத்து வந்து மொத்த பில்லையும் தயாரிப்பாளர் கணக்கில் கட்டுகிறாராம். தற்போது நடித்துவரும் படங்களின் ஷூட்டிங்கில் ஒரு ஜிம் மாஸ்டரையும் கூடவே அழைத்துவருகிறாராம். ஜிம் மாஸ்டருக்கு ஆகும் ஹோட்டல் ரூம் செலவு, சாப்பாடு, போக்குவரத்து என அத்தனை செலவையும் தயாரிப்பாளரின் தலையில் கட்டுகிறாராம்!

காமெடி நடிகரை பன்ச் நடிகர் படத்தில் நடிக்க அழைத்தார்களாம். ஆனால் புயல், ‘நான் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஹிட்டாக்கிவிட்டுதான் காமெடியனாக நடிப்பேன். இல்லையெனில் ஹீரோவாக நடித்து தோல்வியடைந்ததால்தான் காமெடியனாக நடிக்கிறேன்’ என ஏளனமாகப் பேசுவார்கள் என்று மறுத்து விட்டாராம்!

ட்ட இயக்குநரை நடிக்கவைத்து ஒரு தெலுங்கு இயக்குநர் படம் இயக்குகிறாராம். அந்தப் படத்தில் தாடியின் ஜோடியாக நடிக்க அவரின் ‘முன்னாள் காதலி’யான நம்பர் நடிகையை அணுகினாராம் தெலுங்கு இயக்குநர். ‘அவர் இருக்கும் பக்கம் நான் தலைவைத்துக்கூட படுக்க விரும்ப வில்லை, இதுவரை நான் பட்ட காயங்கள் போதும், கோடி ரூபாய் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியாது’ என்று தடாலடியாகச் சொல்லிவிட்டாராம் நம்பர்!

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் என மூணு நம்பர் நடிகை சொல்லியபோது அதை ஆதரித்த வருங்காலக் கணவர் தற்போது அந்த முடிவைக் கைவிடுமாறு சொல்லியிருக்கிறாராம். இதனால் கடுப்பான நம்பர் நட்பு வட்டத்தில் புலம்பிவருகிறாராம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close