ஜெய், திரு படத்தில் த்ரிஷா இல்லை? | த்ரிஷா, trisha,jei, ஜெய், திரு

வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (26/03/2015)

கடைசி தொடர்பு:17:33 (26/03/2015)

ஜெய், திரு படத்தில் த்ரிஷா இல்லை?

'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' படங்களுக்குப் பிறகு திரு இயக்கவிருக்கும் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் கும்பகோணத்தில் தொடங்கவுள்ளது.


இந்நிலையில் ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் த்ரிஷா இப்படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகிவருகின்றன. த்ரிஷா மற்ற சில படங்களில் பிஸியாக இருப்பதால் இப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறுகின்றனர். அதனால் ஜெய்க்கு ஜோடியாக வேறு நடிகையை படக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். விரைவில் அறிவிப்பு வெளியாகும். படத்திற்கு தயாரிப்பாளர் வருண்மனியன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய், ஆன்ட்ரியா நடிப்பில் 'வலியவன்' வெளியாகவிருக்கிறது, அதைத் தொடர்ந்து “புகழ்” பட வேலைகள் முடிந்ததும் ஜெய் இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close