அஜித்துக்கு தங்கச்சியா? ... நோ சொல்லும் நடிகைகள்... | heroines strictly avoiding as a role of ajith's sister..

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (27/03/2015)

கடைசி தொடர்பு:13:13 (27/03/2015)

அஜித்துக்கு தங்கச்சியா? ... நோ சொல்லும் நடிகைகள்...

அஜித், விஜய்  படமென்றாலே நடிகைகள் நான் நீ என போட்டி போடுவது வழக்கம். தற்போது அடுத்து அஜித்  நடிப்பில் வீரம் சிவா இயக்கும் புதிய படத்திற்கு இரு நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. முதலில் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க வந்த நடிகைகள் இப்போது மறுத்து வருகின்றனர்.

காரணம் ஒரு நாயகி அஜித்துக்கு ஜோடி இன்னொரு நாயகி அஜித்துக்கு தங்கச்சியாம். இரண்டாவது நாயகியாக வந்து சென்றால் கூட ஓகே ஆனால் அஜித்துக்கு தங்கச்சி என்றால் முடியவே முடியாது என்கின்றனராம்.

இந்த படத்திற்குத்தான் அனிருத் இசையமைக்க இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் அனிருத் தெரிவித்திருந்தார். அஜித்துக்கு ஜோடி கிடைப்பது எளிது, ஆனால் தங்கச்சிதான் ரொம்ப சிரமம் பாஸ் என்கிறது நெருங்கிய வட்டாரங்கள். அதெப்படி பாஸ் நடிகைகள் ஒத்துக்குவாங்க.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close