ஆஃப் த ரெக்கார்டு! | Off the Record

வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (30/03/2015)

கடைசி தொடர்பு:15:48 (30/03/2015)

ஆஃப் த ரெக்கார்டு!

புத்த இயக்குனர் இயக்கத்தில் விரல் நடிகர் நடிக்கும் படத்தில், காணாமல் போன ஹீரோயினைத் தேடிக் கண்டுபிடிக்கும் கேரக்டராம். ஆனால் ஹீரோவே அவ்வப்போது ஷூட்டிங்கில் காணாமல் போய்விடுவதுதான் கடுப்பு. 

‘தலைன்னு பேர் வெச்சிருந்தா இந்நேரம் படம் ரிலீஸ் ஆகியிருக்கும்’ என்று டெரர் ஸ்டார் டிவிட்டரில் டிவிட் போட, கடுப்பாகி கோபமுகம் காட்டினாராம் விரல் நடிகர். “அது என்னோட அக்கவுண்ட் இல்லைங்க. போலி அக்கவுண்ட்” என்று பரிதாபமாகச் சொன்னாராம் டெரர்.

 

சின்னப்பூ நடிகை, பட விழாக்கள், பிரஸ் மீட்களில் கலந்துகொள்வது இல்லை. காரணம், இதுவரை காதல் முறிவு பற்றி மட்டுமே கேள்விகள் வந்த பிரஸ்மீட்டில், இப்போது குளியல் வீடியோ பற்றியும் கேள்விகள் வருதாம்.

தாய்மொழியான மலையாளப் படங்களுக்கு மட்டும் சம்பள விஷயத்தில் சிறப்பு சலுகைகள் கொடுக்கும் நம்பர் நடிகை தமிழ்ப் படங்களுக்கு கறார் காட்டுகிறாராம். சமீபத்தில் இவர் ஒப்பந்தமான படத்தில் இவருக்குக் கொடுத்த சம்பளம் மூணு கோடிரூபாயாம்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close