அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் ஸ்ரீதேவி!

தமிழ்நாட்டில் பிறந்து அனைத்து மொழி படங்களிலும் நடித்த ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி. இந்தியின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் ஸ்ரீதேவி. திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி, கே.பாலசந்தரின் ’மூன்றுமுடிச்சு’ படத்தின் மூலம் நடிகையாக பேசப்பட்டவர். பின்னர் ’16வயதினிலே’, ’சிகப்பு ரோஜாக்கள்’, ’மூன்றாம் பிறை’, ’மீண்டும் கோகிலா’ போன்ற படங்களின் மூலம் பிரபலமானார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ’இங்லிஷ் விங்லிஷ்’ என்ற இந்தி படத்தின் மூலம் ரி-எண்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி. அந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் நடிக்கும் ’புலி’ படத்தில் ராணியாக நடித்துவருகிறார்.  அடுத்தக் கட்டமாக தெலுங்கிலும் நடிக்கவிருக்கிறாராம் ஸ்ரீதேவி.

தமன்னா, அனுஷ்கா நடித்துவரும் ’பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கவிருக்கும் படத்தில் ஸ்ரீதேவி அவருக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெலுங்கு வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!