ஆஃப் த ரெக்கார்டு! | off the record

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (06/04/2015)

கடைசி தொடர்பு:19:26 (06/04/2015)

ஆஃப் த ரெக்கார்டு!

துரை படம் வெளியானதிலிருந்து வில்லனையே எல்லோரும் பாராட்டியதை நினைத்து கடுப்பில் இருந்த நாயகன், தற்போது அவருக்கு விருதும் கிடைத்ததில் செம அப்செட்டாம். சமீபத்தில் ஓர் இயக்குநர் கதை சொல்லப் போனபோது இன்னொரு நாயகனாக விருது நாயகனை சொல்ல, அவர் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.!
 
மீபத்திய தேசிய விருதுக் குழுவில் நடுவர்களாக இருந்த ஆசான் இயக்குநர் மீது கடும் கோபத்தில் இருக்கி றாராம் புதுமை விரும்பி. சிறப்பான திரைக்கதைகொண்ட தன் படத்தைக் கண்டுகொள்ளவேயில்லையே என்று வருத்தமாம்!

சை வாரிசு இயக்குநர் பிரகாச நடிகரை வைத்து இயக்கும் படத்தில் மொட்டை வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்க, “நான் ஹீரோவா, அவர் ஹீரோவா?” என்று செம கடுப்பாகிவிட்டாராம் நாயகன்!

வீடியோ வெளியானதைத் தொடர்ந்து எந்த ஹோட்டலுக்குப் போனாலும் ‘இந்த ஹோட்டலில் கேமரா இல்லை’ என எழுதி வாங்கிவிட்டுதான் ரூம் புக் செய்கிறாராம் சின்னப் பூ நடிகையின் அம்மா. தவிர, மகளுக்குப் பாதுகாப்பாக மூன்று புதிய பாதுகாவலர்களையும் நியமித்திருக்கிறார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close