வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (11/04/2015)

கடைசி தொடர்பு:16:31 (11/04/2015)

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் கதை?

 சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் , ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் , ஸ்ரீதேவி மற்றும் சுதீப் நடித்து படம் ‘புலி’. இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்துவருகின்றன. இப்படத்தின் முடிவுக்கு பிறகு விஜய் அட்லியின் புதிய படத்தில் இணைய உள்ளார்.

’மௌனராகம்’,’ரிதம்’ படம் பாணியில் ‘ராஜா ராணி’ படத்தை எடுத்தாலும் மேக்கிங்கில் பக்காவான திரைக்கதை மற்றும் வசனஙக்ளை அமைத்து ஹிட் கொடுத்தார் அட்லி. தற்போது அதேபாணியில் விஜய்யின் படமும் போலீஸ் சார்ந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

விஜயகாந்த நடித்த அண்டர்கவர் போலீஸ் சார்ந்த கதையான ‘சத்திரியன்’ படத்தின் கதையாக இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. அதில் போலீசாக இருந்த விஜயகாந்த் மனைவியை இழந்தவுடன் குழந்தைகளின் நலன் கருதி போலீஸ் வேலையை விட்டுவிட்டு மெக்கானிக்காக இருப்பார். 

பின் மீண்டும் வரும் பிரச்னையால் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு எதிரிகளை துவம்சம் செய்வார். இதே பாணியில்தான் சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதையும் இருந்தது. எனவே அதே பாணி கதையா என கேள்விகள் எழுந்தாலும் படம் குறித்து எந்த தகவல்களையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது அட்லீ டீம். 

சமந்தா, எமி ஜாக்சன் என இதிலும் இரு ஹீரோயின்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ். இப்போதே ஜி.வி. இசை வேலைகளில் மும்முரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்