ஆஃப் த ரெக்கார்டு! | Off The Record!

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (13/04/2015)

கடைசி தொடர்பு:10:49 (13/04/2015)

ஆஃப் த ரெக்கார்டு!

வெற்றி நடிகர் நடித்து நீண்ட நாட்களாக பெட்டியில் கிடந்த காதலி படத்தை டி.வி.டி-யில் வெளியிடுவதாகத் திட்டம். இடையில் என்ன நடந்ததோ ‘நாங்கள் திரையரங்கிலேயே திரை யிட்டுக் கொள்கிறோம்’ என பின்வாங்கி விட்டார்களாம்!

கோட் நடிகர் நடிக்கும் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகள். அதில் இரண்டாவது நாயகியாக நடிக்க கேட்டவுடன் கண்மணி நடிகை ஓகே சொன்னாராம். அதற்கப்புறம்தான் தெரிந்ததாம் அது நடிகரின் தங்கை கேரக்டர் என்று. விலகிவிட்டார் கண்மணி. அவர்கூட நடிச்சா மட்டும் போதும் என அந்த வாய்ப்பை தவ நடிகை கப்பென்று பிடித்துக்கொண்டாராம்!

ற்கெனவே நம்பரும், உயிர் நடிகரும் இணைந்த படம் நன்றாக ஓடியது. சில மாதங்களுக்கு முன் உயிர் நடிகருடன் இணையும் வாய்ப்பை நிராகரித்தார் நம்பர். இடையில் ஒரு பெரிய சூட் கேஸ் கைமாறியதால் மீண்டும் உயிர் நடிகருடன் இணைய டபுள் ஓகே சொல்லிவிட்டாராம்!

ற்கெனவே சூடாக இருக்கும் நம்பர் நடிகையின் மார்க்கெட் மேலும் மேலும் உயர்வதால் திடீரென இனி பிகினி உடையிலோ, முத்தக் காட்சியிலோ நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துள்ளாராம் நம்பர்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close