சிக்கலில் ‘மாஸ்’ பட தலைப்பு? | Masss Movie title may change?

வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (13/04/2015)

கடைசி தொடர்பு:13:14 (16/04/2015)

சிக்கலில் ‘மாஸ்’ பட தலைப்பு?

சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் ப்ரணிதா, பிரேம்ஜி, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது ரிலீசுக்கு காத்திருக்கும் இப்படத்திற்கு புதியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

படத்தின் தலைப்பு. இது ஏற்கனவே சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்த விஷயமே. ‘மாஸ்’ படத்தின் தலைப்பு தமிழ் பெயர் இல்லை என்பதாலும் ‘மாஸ்’ என்பது ஆங்கில தலைப்பு என்பதாலும் இந்த தலைப்பை ஏன் வைத்தார்கள் பின்னாளில் கண்டிப்பாக இந்த தலைப்பு சிக்கலாகும் என அரசல் புரசலாக பேசப்ப்ட்டது.

தற்போது படக்குழுவினர் இந்த தலைப்பில் படம் வெளியானால் வரி விலக்கு கிடைக்காது என்பதால் வேற தலைப்பு வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்லன. மேலும் இப்படம் திகில் மற்றும் நகைச்சுவை படம் என்பதால் யு சான்றிதழ் கிடைக்கவும் வாய்ப்பிருக்காது என்பதால் படத்தலைப்பை மாற்ற உள்ளனர். இப்படம் மே மாதம் வெளியாகவிருக்கிறது. படத்தின் தலைப்பை மாற்றுகிறார்களா? அல்லது மாற்றாமல் அப்படியே வெளியிடுகிறார்களா? என்பது இனிதான் தெரியவரும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close