ஆஃப் த ரெக்கார்டு

தெலுங்கின் பிரமாண்டமான படத்தில் நடித்துக்கொண்டிருந்த பளிச் நடிகை, இரண்டெழுத்து உயர நடிகரின் காதல் வலையில் விழுந்துவிட்டாராம். நடிகரின் பாரம்பரியமான குடும்பத்தினருக்கு இந்த விஷயம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். ஏற்கெனவே நம்பர் நடிகையையும் குடும்பத்தினர் எதிர்ப்பால்தான் பிரிந்தாராம் ஹீரோ!

மீபத்தில் வாரிசு நடிகை விமானத்தில் போகும்போது ஆந்திராவைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் யாருக்கும் தெரியாமல் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாராம். இது பயணம் செய்துகொண்டிருந்த நடிகைக்கு தொந்தரவாக இருந்ததாம். உடனே, ‘விமானத்தில் போன் பேசுறதே தப்பு. இதுல சத்தமா வேற பேசுறீங்களா’ என அவரை காட்டமாகத் திட்டி போன் பேசுவதை நிறுத்தச் சொல்லிவிட்டாராம். அரசியலும் பம்மிப் பதுங்கிவிட்டதாம்!

ற்கெனவே இரண்டு படங்களில் இணைந்து நடித்தபோது பளிச் நாயகியுடன் கிசுகிசுக்கப்பட்ட தம்பி நடிகர், தற்போது இரண்டு மொழிகளில் நடிக்கும் படத்தில் இடுப்பு நடிகைதான் ஹீரோயினாம். இதனால் உள்ளுக்குள் ஜில்லென்று இருந்தாலும் வீட்டில் பிரச்சனை ஆகிவிடுமோ என பயப்படுகிறாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!