ஆஃப் த ரெக்கார்டு

டல்’ நாயகன் தற்போது ஏகப்பட்ட புதுப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். படப்பிடிப்பில் எப்படியோ முயற்சி செய்து நடிக்க வைத்து விடுகிறார்கள். ஆனால், டப்பிங் பேச வைப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறதாம். நாயகனுக்கு பதில் வேறு ஒருவரை டப்பிங் பேச வைக்கலாமா என்று யோசித்து வருகிறார்கள் அந்தளவுக்கு சொதப்புகிறாராம் மிஸ்டர் கடல்!

ம்பர் நடிகை முதல் . இரண்டாம் , என இப்போது மூன்றாம் இன்னிங்ஸிலும் டாப் ஹீரோயினாக நிற்கிறார். இந்நிலையில் ஒரு பிரபல நகைக் கடை நிறுவனம் நம்பரை விளம்பரத்தில் பயன்படுத்த அணுகிய போது 4 கோடிகள் வேண்டும் என கராராக சொல்ல. அதற்கும் சம்மதித்து விட்டதாம் நகை கடை தரப்பு. விளம்பரத்திற்கு 4 கோடியா என மற்ற நடிகைகள் கொஞ்சம் புகைச்சலில் இருக்கிறார்களாம்!

ன்ச் நடிகர் நடித்து வரும் விலங்கு படப்பிடிப்பின் போதுதான் தமிழர்கள் கொலை சம்பவம் அரங்கேறியது. எனினும் இதுகுறித்து பன்ச் எந்த அறிவிப்போ, அல்லது ஆதரவோ தெரிவிக்காதது ஏன் என இப்போது கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. ஏற்கனவே நாம் நடிக்கும் படமென்றாலே பிரச்சனைகள் தேடி வருகையில் ஏன் நமக்கு வம்பு என இருக்கிறாராம் பன்ச்! 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!