த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு? | Rough patches between Trisha - Varun Manian ?

வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (27/04/2015)

கடைசி தொடர்பு:18:45 (27/04/2015)

த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு?

 ஜனவரி 23ம் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது த்ரிஷா வருண்மணியன் நிச்சயதார்த்தம். கடந்த வருட இறுதி முதலே கிசுகிசுக்களில் சிக்கிய இருவரும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டனர்.

தற்போது புதிய செய்தியாக இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் உருவாகியுள்ளன எனவும், எனவே தான் வருண்மணியன் , திரு, ஜெய் இணைந்துள்ள புதிய படத்தில் த்ரிஷா நடிக்க இருந்து பின் டாப்சி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

திருமணம் விரைவில் என அறிவித்தாலும் கூட த்ரிஷா தொடர்ச்சியாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளையில் வருண்மணியன் வீட்டு இல்ல விழா ஒன்றிலும் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.. எனவே இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் உருவாகி உள்ளது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. இதனால், த்ரிஷா-வருண்மணியன் திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் திரையுலக வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து, சம்மந்தப்பட்ட இருவரும் விளக்கம் அளித்தால்தான் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close