ஆஃப் த ரெக்கார்டு!

 சமீபத்தில் சக்ஸஸ் சேனல் நடத்திய விருது விழாவிற்கு சினிமா சங்கங்கள் ஒன்றுகூடி நள்ளிரவில் செக் வைக்க பல முக்கியஸ்தர்கள் விருது விழாவை புறக்கணித்துள்ளனர். பெரிய படங்களை மட்டும் ஒப்புக் கொள்வது, நட்சத்திரங்களை இஷ்டத்திற்கு அழைத்து விழா எடுப்பது என இருந்த டிவிக்கு சற்றே ஆட்டம் காட்டி விட்டுள்ளனர் நடிகர் சங்கம். இதற்கு பின்னால் ஆளும் கட்சியின் சேனலும் மறைமுகமாக வேலை செய்துள்ளதாம்! 

தெலுங்கு இடுப்பழகி நடிகை திருமணம் செய்யும் எண்ணத்தில் இருக்கிறாராம். அதிக சம்பளம் என இந்தியில் ஆடையைக் குறைத்தும் கூட வாய்ப்புகள் ஏதும் இல்லததால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம். சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டில் தனது ரகசிய காதலனுடன் ஊர் சுற்றிவிட்டு பொழுதை கழித்துவிட்டு வந்துள்ளாராம் மிஸ் இடுபழகி!

விளையாட்டு வீரரின் காதலியும், நடிகையுமான ஷர்மா நடிகை விரைவில் தனது காதலர் விளையாடும் போட்டியைக் காண மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம். ஏற்கனவே நடந்து முடிந்த பூமிக் கோப்பை விளையாட்டில் தோல்வியுற்றதற்கு ஷர்மாதான் காரணம் என பலரும் மிம்ஸ்களை க்ரியேட் பண்ண இந்த போட்டிக்கு போலாமா வேண்டாமா? என சிந்தித்து வருகிறாராம் மிஸ் ஷர்மா! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!