ஆஃப் த ரெக்கார்டு!

 விரல் நடிகரோட படம் இன்னிக்கு ரிலீஸ், நாளைக்கு ரிலீஸ் என்ற காலம் போய் இப்போது எந்த வருடம் ரிலீஸ் என்ற நிலைக்கு மாற விரலைக் காப்பற்ற அவரது தந்தையாரே களத்தில் குதித்துள்ளார். அவரது சொந்த தயாரிப்பிலேயே படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துவிட்டாராம். இவருக்கு பிறகு நடிக்க வந்த ஒல்லி நடிகர் கூட இந்திய அளவில் பெயர் வாங்கிவிட்ட நிலையில் தன்னால் ஒரு படத்தை கூட இரண்டரை வருட காலமாக வெளியிட முடியவில்லையே என புலம்பி வருகிறாராம் விரலு! 

திடீரென லட்சுமிகரமான நடிகை நடந்து முடிந்த தேர்வில் பெயில் என வதந்திகள் பரவ. நடிகையின் தாய்குலமோ என்ன இது இப்படியெல்லாம் வதந்திகள் கிளப்புகிறார்கள். என் மகள் சிபிசிஎஸ்சி பாடத்தில் பரீட்சை எழுதியிருக்கிறாள். இன்னமும் ரிசல்டே வரவில்லை என பொங்கி விட்டாராம். 

ரு காலத்தில் பிரம்மாண்ட இயக்குநரின் படங்களில் எல்லாம் தாருமாறாக நடித்துவிட்டு இப்படி காமெடி புயல் ஜோடியாகி விட்டீர்களே என ’போ’ நடிகையை யாரோ கேட்டு உசுப்பேத்த காமெடி நடிகர் என்றால் என்ன எனக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நான் நடிப்பதில் தவறு ஏதுமில்லையே என சீறிப்பாய்ந்துள்ளாராம் ’போ’ நடிகை

லையாள மூன்றெழுத்து நடிகை தமிழ், தெலுங்கு என பல படங்களில் ஒரு காலத்தில் கொடி கட்டியவர் இப்போது சொந்த மண்ணில் கூட பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்க அவ்வப்போது வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கிவிட்டாராம். இன்னும் இப்படி காத்திருப்பதை விட்டுவிட்டு விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளாராம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!