ஆஃப் த ரெக்கார்டு!

டைத்தெரு நடிகை சமீபகாலமாக சொல்ல முடியாத அளவிற்கு குண்டாகிவிட்டார். சுற்றி இருந்தவர்கள் இப்படியே போனா மார்கெட் காலியாகிடும்னு பயமுறுத்த இப்போ மிஸ் கடைத்தெரு கடுமையான உடற்பயிற்சியில் இருக்கிறாராம். மேலும் இதுவரை இருந்த பிரச்னைகள் அனைத்தையும் மூட்டைக்கட்டுவதற்காக இ-மெயில், மொபைல் எண் என அனைத்தையும் மாற்றிவிட்டாராம்!

ரு பக்கம் காமெடிப் புயலும், மறு பக்கம் சாண்டல் காமெடி நடிகரும் மாறி மாறி ஹீரோவாக நடிக்க, சால்னா காமெடியன் காட்டில் கன மழை பொழிகிறது. கணிசமாக சம்பளத்தையும் ஏற்றலாமா என யோசித்து வருகிறாராம் மிஸ்டர் சால்னா!

கரத்து இளைஞன் கெட்டப்பில் நடித்த தனது படங்கள் சில காலங்களாக ஓடாமல் போகவே மீண்டும் கிராமத்து கதைக்கு ஓகே சொல்லியுள்ளாராம் ஈ நடிகர். இந்த படத்தின் மூலம் தான் இழந்த மார்கெட்டை திரும்ப பிடிக்கும் நோக்கத்தில் இருக்கிறாராம்!

மிழ் மாலை டிவி தொடர்ச்சியாக வருமா வாராதா படம், அண்ணன் நடிகரின் படம், அவரது மனைவி நடித்த படம் என வளைத்து வளைத்து வாங்க, இடையில் போட்டி போட்ட வெற்றி டிவிக்கு பெரிய படங்கள் ஏதும் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இது மட்டுமின்றி நடந்து முடிந்த விருது விழாவிலும் டிவிக்கு சங்கம் கல்தா கொடுக்க ஆளும் கட்சி சேனல், எதிர்கட்சி சேனல் என அனைத்தும் களத்தில் குதித்து பல பெரும் படங்களை லபக்கிக் கொண்டுள்ளனர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!