மீண்டும் காதலில் விழுந்தாரா நயன்தாரா? | Nayanthara fall in love again?

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (13/05/2015)

கடைசி தொடர்பு:17:44 (13/05/2015)

மீண்டும் காதலில் விழுந்தாரா நயன்தாரா?

மலையாளத்தில் ஓரிரு படங்களுக்கு பிறகு  ’ஐயா’ படம் மூலம் தமிழில் களமிறங்கியவர் நயன்தாரா. தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தெலுங்கு, மலையாளம் என அங்கேயும் டாப்  நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்தார். 

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும், நம்பர் 1 நடிகையாகவும் வலம் வருகிறார். எனினும் இடையில் சிம்புவுடன் காதல் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருத்தல் பின்னர் பிரிவு என ஆனது. மீண்டும் அந்த பிரச்னை ஓய்ந்து நடிக்க வந்தவர் இயக்குநர் பிரபு தேவாவுடன் ‘வில்லு’ படத்தின் போது நெருக்கமாக காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் அறிவிக்கும் வரை சென்றனர். 

மீண்டும் இருவருக்கும் இடையே பிரிவு, ஏற்பட இப்போதுதான் அதையெல்லாம் விட்டுவிட்டு சினிமா பக்கம் மனதை முழுமையாக திசை திருப்பினார். இப்போது மீண்டும் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். படப்பிடிப்பின் போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. எனினும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட இருவரும் மௌனமாக இருக்கும் வரை கிசுகிசு ஓயப்போவதில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close