ஆஃப் த ரெக்கார்டு!

நம்பர் ஒன் நடிகரின் புதிய படத்தை அறிவித்த அதே நேரத்தில் அவரது முந்தைய படத்தின் பிரச்னையே இன்னமும் முடியாமல் இழுபறியில் இருப்பதால். இந்த பிரச்னை எங்கே இப்போது உருவாக உள்ள படத்தை பாதித்து விடுமோ என படக்குழு சற்றே யோசித்து வருகிறார்களாம்!

திருமணமாகி செட்டிலாகி விடுவார் என பல நடிகைகள் எதிர்பார்த்த நம்பர் நடிகை திடிரேன கல்யாணத்தை வேண்டாம் என கூறி மீண்டும் களத்தில் இறங்கி பல படங்களை லபக்கிக் கொண்டுள்ளாராம். இதனால் நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த சில நடிகைகள் கொஞ்சம் பல்லை நரநரக்கத் துவங்கியுள்ளனர். 

விரல் நடிகரின் நாளொரு தள்ளிவைப்பால் கோலிவுட்டில் சலசலப்பு அதிகமாகி உள்ளது. மேலும் இப்போது நடக்கவிருந்த செய்தியாளர் சந்திப்பும் தள்ளிவைக்கப்பட நடிகர் தரப்பிலிருந்து மீண்டும் ஒரு தள்ளிவைப்பு என மீடியாக்கள் செய்திகளை வெளியிட அப்செட்டில் இருக்கிறாராம் விரலு! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!