ஆஃப் த ரெக்கார்டு!

 தெலுங்கு உலகின் பிரம்மாண்ட படத்தின் இசை விழாவில் அண்ணன் நடிகர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இந்த படத்தின் பார்ட் 2வில் அண்ணன் நடிகர் நடிக்கிறாராம் .அதன் காரணமாகவே அண்ணன் விழாவில் கலந்துகொண்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பார்ரா!

பன்ச் நடிகரின் படவிழாவிற்கு உச்ச நடிகர் வருவார் என அனைவரும் காத்துகிடந்த வேளையில் உச்ச நடிகர் வராமல் கல்தா கொடுத்தார். ஏற்கனவெ உச்ச நடிகரின் பட்டத்திற்கு பன்ச் நடிகர் சொந்த கொண்டாடியதுதான் இதற்கு காரணம் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறார்கள். அட சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா! 

காசு கொடுத்தா கால்ஷீட் என நம்பர் நடிகை குண்டைத் தூக்கி போட விரல் நடிகரின் படம் தாமதமாகி வருகிறது. ஏற்கனவே நம்பர் கொடுத்த தேதியில் படப்பிடிப்பு நடத்தாமல் விரலின் தயாரிப்புத் தரப்பு சொதப்ப பலமுறை இது தொடர்கதையாகிறதே என இனியும் பொறுக்க முடியாது காசைக் கொடுத்தால் கால்ஷீட் என கூறிவிட்டாராம் நம்பர் நடிகை. இன்னும் சில காட்சிகள், பாடல்களை எடுக்காமல் இருக்கும் நிலையில் மொத்தக்குழுவும் கையை பிசைந்துவருகிறதாம். அடக்கடவுளே! 

என்னதான் பூலோக நடிகருடன் இரண்டாவது படத்திலும் நடித்துவிட்டாலும் கூட மூணு நம்பர் நடிகையின் ஒரே வருத்தம் உச்ச நடிகருடன் இன்னும் ஜோடி சேர முடியவில்லை என்பதுதானாம். தனது மிகப்பெரிய ஆசையாக பல பேட்டிகள், சந்திப்புகள் என எங்கு எப்படி கேட்டாலும் உச்ச நடிகரையே டார்கெட் செய்து பதில் கொடுக்கிறாராம் நம்பர் மூணு. இதுல ஒன்னும் தப்பில்லையே! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!