நயன்தாராவைத் தொடர்ந்து ஸ்ரீதிவ்யா- இணையத்தில் பரவும் ஆபாசப்படங்கள்

மார்பிங் முறையில் நடிகைகளைத் தவறாக சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக வெளியாகிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக நடிகைகளை தவறான முறையில் கிராஃபிக்ஸ் செய்து இணையத்தில் பரப்பிவருகின்றனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீதிவ்யாவின் ஆபாச படம் இணையத்திலும், வாட்ஸ் ஆஃப்களிலும் பரவி வருகின்றன. இப்படங்களை ஸ்ரீதிவ்யாவின் ஆபாச புகைப்படங்கள் என்று ஒரு சாரார் பரப்பிவருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் இப்படங்கள் மார்ஃபிங் முறையில் உருமாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நயன்தாராவின் ஆபாச படங்கள் என்று இதோ போல மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நவீன தொழில்நுட்ப வசதி, எந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டாலும் வாட்ஸ் அஃப், பேஸ் ஃபுக் என்று எளிதில் பரவி விடுவதால் மார்ஃபிங் செய்யும் நெட்டிசன்கள் இவ்வாறு தவறான செயல்பாடுகளில் இறங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் சம்மந்தப்பட்ட நடிகைகள் எவ்வாறு வருந்துவார்கள் என்று கொஞ்சமும் இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.  இணையத்தில் இந்தமாதிரியான புகைப்படங்கள் வெளியாவதற்கு வலுவான எதிர்ப்புகளும் வெளியாகத்தான் செய்கிறது.

இதற்கு முன்னர் வசுந்தரா, சோனியா அகர்வால், ஹன்சிகா , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகைகளின் ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் பரவியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான புகைப்படங்களை வெளியிடுவதும், பரப்புவதும் கூட தவறான செயல் என்பதை மக்கள் புரிந்தால் மட்டுமே, இவ்வாறான புகைப்படங்கள் வெளியாகாமல் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!