ஆஃப் த ரெக்கார்டு!

 ல்லிபிச்சான் நடிகரின் லோக்கல் படம் பல சேனல்களில் விலை போகாது போகவே அதை அவரே தன் சொந்த காசை போட்டு சாட்டிலைட் உரிமத்தைப் பெற்றுக் கொண்டாராம். இதற்கு படம் அவரின் பழைய படங்கள் பாணியிலேயே லோக்கல் அசால்ட் நடிப்பு என இருப்பதாக சொல்கிறார்கள். அந்த கடலே வத்திப் போனா! 

 கோட் நடிகர் கூட நடிக்கும் நடிகர்களை போட்டோக்களாக்க க்ளிக்கி தள்ள ஆளாலுக்கு கோட் நடிகர் புராணம் பாடத் துவங்கிவிட்டனர். இதில் கொஞ்சம் உச்சி குளிர்ந்த மூத்த வாரிசு நடிகை ட்விட்டரில் ஏகபோகத்துக்கு புகழ்ந்து தள்ள கோட்டின் போட்டியான பன்ச் நடிகரின் ரசிர்கள் வாரிசை திட்டித் தீர்க்க துவங்கிவிட்டனர். இதில் ஒரே சமயத்தில் வாரிசு இருவருடனும் நடிக்கிறார் ஆனால் பாராட்டு அவருக்கு மட்டும் தானா என கேள்விகள் வேறு...சும்மா இருந்த சங்கை ஏன் ஊதணும்! 

 பிரபல டிவியின் செல்ல தொகுப்பாளினி திடீரென சேனலை விட்டு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். தற்போது அடுத்த கட்டமாக ஃபேஷன் நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்து கொள்கிறாராம்.சமீபத்தில் சென்னையில் நடந்த ஃபேஷன் ஷோவில் கூட தொகுப்பாளினி கலக்கல் பெர்ஃபாமென்ஸ் கொடுத்துள்ளார். பிறகு ஏன் டிவியை விட்டு வெளியேற வேண்டும் என தற்போது டிவி உலகம் கேட்க துவங்கிவிட்டது...அதானே! 

வர்ச்சியா இனி கிடையவே கிடையாது என கரார் காட்டுகிறார் சர்ச்சை மலையாள மேனன் நடிகை. என்ன ஆச்சு இந்த நடிகைக்கு என கேட்டால் இனியாவது கவர்ச்சியை விட்டுவிட்டு கொஞ்சம் கணமான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம் மேனன் நடிகை... இப்பவாவது எடுத்தாங்களே! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!