பாபி சிம்ஹா, ரேஷ்மி இருவருக்கும் காதலா...என்ன சொல்கிறார்கள் இருவரும்? | Bobby Simha , Reshmi On Love....What they are saying?

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (16/07/2015)

கடைசி தொடர்பு:13:23 (18/07/2015)

பாபி சிம்ஹா, ரேஷ்மி இருவருக்கும் காதலா...என்ன சொல்கிறார்கள் இருவரும்?

உறுமீன்  படத்தின் மூலம் இணைந்து நடித்து வரும் பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மியும் காதலில் சிக்கியதாகவும், மேலும் இருவரும் விரைவில் ரகசிய திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சம்மந்தப்பட்ட இருவரும் மௌனம் கலைத்தால் மட்டுமே கிசு கிசுக்கு முற்றுப் புள்ளி வைத்தால் மட்டுமே முடிவு பிறக்குமென இருவரையும் அழைத்து பேசினோம்.

பாபி சிம்ஹா கூறுகையில், எனக்கும் காதல் எல்லாம் எதுவும் இல்லை. ‘ஜிகர்தண்டா’ படத்திற்கு பிறகு மக்கள் என்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள், இனி நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் இதுதான் எனது ஒரே குறிக்கோள் எனக் கூறினார். நெருப்பில்லாமல் புகையாதே, நீங்கள் மறுப்பு தெரிவித்தும் கூட செய்திகள் பரவிய வண்ணம் உள்ளனவே என கேட்டபோது, அதுதான் எனக்கு புரியவில்லை, நான் எல்லோருக்கும் கிசுகிசுவுக்கு மறுப்புதான் தெரிவித்துவருகிறேன் எனினும் செய்திகள் காதல் என்றே பரவுகிறது எனக் கூறினார் பாபி சிம்ஹா. 

இவர் இப்படி சொல்லிய அதே வேளையில் நடிகை ரேஷ்மியோ , இப்போதைக்கு படத்தை நல்ல முறையில் முடிக்க வேண்டும். அது மட்டுமே ஒரே குறிக்கோள். இந்த செய்திக்கு நீங்கள் மறுப்பு கொடுக்கலாமே என கேட்ட போது, என்ன மறுப்பு கொடுத்து என்ன ஆகப் போகிறது இதையும் ஒரு செய்தியாக்கித்தான் பரப்புவார்கள். எனக் கூறினார். எனினும் பாபி சிம்ஹா போல் காதல் இல்லை என ரேஷி மறுக்காதது ஏன் என்பதே ஒரே கேள்வியாக இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்