ஆஃப் த ரெக்கார்டு! | Off The Record!

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (23/07/2015)

கடைசி தொடர்பு:16:53 (23/07/2015)

ஆஃப் த ரெக்கார்டு!

டிகர் சங்க தேர்தல் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இரண்டு கூட்டணிகள் களம் இறங்கி யார் பக்கம் யார் என்ற கேள்விகள் ஒருபக்கம் மண்டை காய விட்டுக்கொண்டிருக்கிறது. ஒல்லிபிச்சானும், விரல் நடிகரும் அவர்களது கூட்டணி சூழ நாட்டாமையுடன் கூட்டணி போட , அட இவங்கள விடுங்க பாஸ்,அந்த உச்ச பட்ச நடிகர்கள் நாலு பேரும் யார் பக்கம் எனக் கேள்விகள் எழுந்துள்ளன. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!

பிரம்மாண்ட அரச படத்தின் புரோமோஷன்கள், சக்ஸஸ் மீட் என எந்த நிகழ்ச்சிக்கும் அந்த உயர நடிகை கலந்து கொள்ளவில்லையாம். படத்தில் இவருக்கு முக்கியத்துவம் இல்லை அதான் அம்மணி எஸ்கேப் என கொளுத்திப் போட ஆரம்பித்துவிட்டது சினிமா பட்சிகள். ஆனால் உண்மையான காரணம், அவர் நடித்து வரும் அடுத்த படத்திற்காக எக்குத்தப்பாக உடல் எடையைக் கூட்டியிருப்பதுதான் காரணமாம். வந்தால் எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதற்காகவேதான் தவிர்க்கிறாராம். டெடிகேஷனா அம்மணி!

னக்கென தனி ட்ராக்கில் போகும் நம்பர் 1 நடிகை தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்குக் கூட பதில் ஏதும் சொல்லாமல் இருக்கிறார். இவங்க படம் வருதோ இல்லையோ கிசு கிசுக்கள் மட்டும் பக்காவா வருது. என்னப்பா நடக்குது இவங்களுக்கும் அந்த இயக்குநருக்கும்னு கேட்டா, எல்லாம் ஒரு விளம்பந்தானு ஒரே பதிலா தூக்கி போட்றாங்க. ஓ நீங்க நம்பர் ஒன்னா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close