ஆபாச வீடியோவில் கமல் பட நடிகை- போலிஸில் புகார்

 மெகா ஹிட் படமான த்ரிஷ்யம் , பாபநாசம் படங்களில் போலீஸாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் வென்ற ஆஷா சரத்தை தவறாக சித்தரித்து வாட்ஸப்பில் வீடியோவாக பகிரப்பட்டு வருகிறது. 

சமீபகாலங்களாக நடிகைகளை ஆபாசமான முறையில் புகைப்படங்களாகவோ அல்லது வீடியோக்களாகவோ சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர் இணைய விஷமிகள். இதுபோன்ற படங்கள் , வீடியோக்கள் வேண்டாம் என ஒதுங்கி இருப்பவர்களையும் கூட கையில் இருக்கும் வாட்ஸப்பில் திணித்து பார்க்க வைத்து தவறான பாதையில் இளசுகளை திசை திருப்பி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். 

த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, தன்ஷிகா, ஸ்ரீதிவ்யா, லட்சுமி மேனன், சோனியா அகர்வால் வரை விட்டுவைக்காத இந்த விபரீத கலாச்சாரம், இப்போது சீனியர் நடிகை மற்றும் மலையாள தயாரிப்பாளர் அஷா சரத்தையும் விட்டுவைக்கவில்லை. 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆஷா  கொச்சி போலீஸ் கமிஷனரை சந்தித்து நேரில் புகார் அளித்துள்ளார். பல நடிகைகள் இப்படிப்பட்ட ஆபாச வீடியோக்களை கண்டுகொள்வதில்லை. நடிகைகள் மத்தியில் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தியுள்ள இந்தப் போக்கை கண்டிப்பாக முடிவுக்கு கொண்டுவரத்தான் வேண்டும். நடிகைகள் என்பதால் இதுபோன்ற வீடியோக்கள் வெளியுலகிற்கு செய்திகளாக வருகின்றன. 

எனினும் இதில் சாதாரண பெண்களும் சிக்குகிறார்கள் என்பதே உண்மை. அவர்கள் பிரபலமானவர்களாக இல்லாத நிலையில் அவை சமூதாயப் பார்வைக்கு வருவதில்லை என்றே கூற வேண்டும்.  ஆஷா சரத்திற்கு வயது 40. இரண்டு டீனேஜ் பெண் குழந்தைகள் வேறு உள்ளனர் என்ற நிலையில் இந்த செயல் இன்னும் அவரை அதிகமாகவே பாதிக்கும். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!