காஜல், சமந்தா குறித்து கமெண்ட் அடித்தாரா ரகுல்?

ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் 2011ம் ஆண்டில் கலந்துகொண்டு 5 டைட்டில்களை வென்றவர் ரகுல் ப்ரீத் சிங். கிரட்டம் எனும் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்துவைத்த ரகுல் ப்ரீத் சிங், அதே வருடம் தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ரிலீஸான ‘தடையற தாக்க’ படம் மூலம் தமிழிலும் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானார். 

தொடர்ந்து கௌதம் கார்த்திக்கின் ’என்னமோ ஏதோ’ படத்தில் நாயகியான நடித்தவர், இந்தியில் யாரியான் படம் மூலம் பிரபலமான நாயகியாக அறியப்பட்டு இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவருக்கு  சீனியர் நடிகைகளான காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் குறித்து தவறான கருத்து கூறியதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. 

காஜல் , சமந்தா போன்ற சீனியர் நடிகைகளுடன் என்னை ஒப்பிடாதீர்கள், அவர்கள் இந்தியில் தோல்வியடைந்தவர்கள் என கமெண்ட் கொடுத்ததாக செய்திகள் பரவ, இதற்கு ரகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். 

நான் எனது சீனியர் நடிகைகள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை, அவர்களிடம் நான் நிறைய கற்றுவருகிறேன். என்னை அவர்களுடன் ஒப்பிடும் அளவிற்கு எனக்கு தகுதியே இல்லை, தவறான செய்திகளை பரப்பாதீர்கள்’ எனக் கூறியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தற்போது லண்டனில் ஜூனியர் என்.டி.ஆரின் 25வது படத்தில் பிஸியாக நடித்துவருகிறார் ரகுல். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!