ஆஃப் த ரெக்கார்டு!

 ரீஎண்ட்ரி கொடுத்துள்ள கடைத்தெரு நடிகை இப்போதெல்லாம் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் கவர்ச்சி ரசம் சொட்ட சொட்டவே வருகிறாராம். காரணம் கவர்ச்சியாக தான் நடித்தாலும், பல இயக்குநர்கள் சேலையிலேயே கவர்ச்சி காட்டும்படியான கேரக்டர்களை மட்டுமே தள்ளி விடுகிறார்களாம். மாடர்ன் கிளாமர் குயினாக தானும் வலம் வர வேண்டும் என்பதே அம்மணியின் நோக்கமாம். சமீபத்திய நிகழ்ச்சியில் கூட நம்பர் நடிகையையே ஓவர்டேக் செய்துள்ளது  நடிகையின் ஆடை. ஒரு முடிவோடதான் இறங்கியிரூக்கீங்க போல! 

ன்ன பாஸ் இது? என் படம் மாதிரியே பல படங்கள் தொங்கல்ல கிடக்கு , ஏன் அந்த குடும்ப நடிகரோட பூமி படம், தாடி நடன இயக்குநரோட பழைய படம், இப்படி பல படங்கள் பெட்டிக்குள்ளையே கிடக்கு, என் படத்தை மட்டும் ஏன் இப்படி ரவுண்டு கட்டுறாங்கன்னு புலம்பி வருகிறாராம் விரல் நடிகர். எல்லாம் டைம் தான்! 

தொடர்ந்து ஓராண்டு கால இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் லோக்கல் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்தார் ஸ்வீட் ஸ்டால் நடிகை. எனினும் அடுத்தும் கூட அந்த திமிரு நடிகரின் படத்தைத் தவிர தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இப்படியிருக்க ஒல்லிபிச்சான் நடிகரை வைத்து இந்தியில் நுழைந்து விட திட்டம் தீட்டி வருகிறாராம் ஸ்வீட் ஸ்டால். இருக்கறத விட்டுட்டு பறக்க ஆசைப்படுறாங்கடோய்! 

மூத்த வாரிசு நடிகை வர வர எந்த நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் ஆடைகளில் பெரிதாக கவனம் செலுத்துவது இல்லையாம். சில நேரங்களில் என்னப்பா அப்பா இருக்கற அந்தஸ்த்துக்கு பொண்ணு ஏன் பொது இடத்துக்கு இப்படி ட்ரஸ்ல வராங்க என கோலிவுட்டில் அரசல் புரசல்களும் ஆரம்பிச்சிட்டாங்களாம். அட விடுங்க பாஸ் பொது வாழ்க்கைனு வந்துட்டா இதெல்லாம் ஒரு பிரச்னையா என்கிறது இன்னொரு கூட்டம். என் ஆடை என் உரிமை! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!