ஆஃப் த ரெக்கார்டு!

 பிரம்மாண்ட இயக்குநர் தோரணையை லபக்கென கவ்விக்கொண்டு விட்டார் தெலுங்கு லோக கிங் இயக்குநர். இந்நிலையில் நம்மூர் பிரம்மாண்டம் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம். இதனால் அடுத்து உச்ச நடிகரை வைத்து எடுக்க உள்ள அறிவியல் சார்ந்த படத்திற்கு தயாரிப்பு செலவையும் கூட்டியதோடு, வில்லனாக நடிக்க உலக ஃபேமஸ் நடிகர் ஒருவரைத் தேடி வருகிறாராம். ஓ இதுதான் பிரம்மாண்டமா! 

தோரணை நடிகரும், அவரது நண்பர் அண்ணன் நடிகரும் இணைந்து ஏகபோகத்துக்கு பன்ச் நடிகரின் புதிய படத்தை கிண்டலடிக்க அவரது ரசிகர்களை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இவர் கோட் நடிகர் ரசிகராக வேறு நடித்து வெளியான டிரெய்லர், இப்போது எறியும் தீயில் எண்ணையாக மாறி புகையத்துவங்கியுள்ளது . நல்லா செஞ்சிட்டீங்க பாஸு! 

யார் யாரோ உச்ச நடிகரின் படத்தில் நாயகியாக ஆவோம் எனக் காத்திருக்கும் நிலையில் திடீரென நேற்று வந்த மகராசி வாய்ப்பை அள்ளி பையில் வைத்துக் கொள்ள கோடம்பாக்க முன்னணி நடிகைகள் பலரின் காதுகளில் புகை வரத் துவங்கியுள்ளது. 15 வருடமாக தூபம் போட்டும் அந்த நம்பர் நடிகைக்குக் கூட அந்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் எப்படி இது சாத்தியம் என்றால் படம் வந்தால் தெரியும் என்ன கேரக்டருன்னு அவசரப்படாதிங்க என்கிறது மற்றொரு கோலிவுட் குறும்பு வட்டாரம்.. என்னவா இருக்கும்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!