ஆஃப் த ரெக்கார்டு!

 ஒருவழியாக பஞ்சாயத்தெல்லாம் முடிந்து விரல் நடிகரின் வெகு நாள் படம் ரிலீஸ் ஆகப் போகிறது. பிரச்னைகள் ஏதும் இப்போதைக்கு இல்லை. மேலும் பன்ச் நடிகரின் தலையீட்டால் இனி பிரச்னைகள் எழாது என நம்பினாலும் சின்ன பயம் படக்குழுவுக்கு லைட்டாக இருக்கத்தான் செய்கிறதாம். உங்க நல்ல மனசுக்கு!

ம்பர் ஒன் நடிகை நல்ல நல்ல பாத்திரங்களை எல்லாம் சமீப காலமாக நிராகரித்து வருகிறாராம். உச்ச நடிகரின் படத்திற்கு பேசப்பட்ட போதும் கேரக்டர் ஹீரோயின் ரேஞ்ச் இல்லை என கழண்டு கொண்டதாக கூறப்படுகிறது. இடையில் புகுந்து பாலிவுட் பச்சக்கிளி கேரக்டரை லபக்கியது. இப்போது பன்ச் நடிகர் படம் , அந்த மலையாள ரீமேக் படம் என வசந்தம் நடிகைக்கு படங்கள் கைமாறியுள்ளது. என்ன தான் ஆச்சு அம்மணி! 

ப்படி இவர் செய்ய மாட்டாரே என ஒல்லி பிச்சான் நடிகரைப் பார்த்து உச் கொட்டி வருகிறது கோலிவுட். தன் தயாரிப்பாகவே இருந்தாலும் விளம்பரம், புரமோஷன் என அதிகம் தலை காட்டாத ஒல்லி பிச்சான் இப்போது லோக்கல் படத்திற்கு இவ்வளவு வசூல் அவ்வளவு வசூல் என பரைசாற்றி வருகிறார். என்ன பிரச்னை என விசாரித்தால் நடிகரிடம் தான் சேட்டிலைட் உரிமம் உள்ளது எப்படியேனும் விற்றுவிடவே இந்த விளம்பரம் என சொல்கிறார்கள் கோலிவுட் குறும்பர்கள். என்னய்யா விளம்பரம்! 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!