வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (10/08/2015)

கடைசி தொடர்பு:13:20 (10/08/2015)

வாய்த்துடுக்கால் கிடைத்த படத்தை இழந்த நடிகர்

 கே.ராஜாராமன் என்கிற புதியஇயக்குநரின் இயக்கத்தில் பாபிசிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் படம் வீரா. இந்தப்படத்துக்கான தொழில்நுட்பக்கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாகவே படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்துவிட்டது. அந்த அறிவிப்பு வந்ததற்குப் பலமான பின்னணிக்காரணம் இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் நாயகனாக நடிக்க, பிரபலஇயக்குநரின் தம்பி, தயாரிப்பாளரின் மகன் ஆகிய அடையாளங்களைக் கொண்ட நடிகரைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வு எல்லாம் முடிந்து படப்பிடிப்புக்குப் போகிற நேரத்தில் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று நினைத்திருந்தார்களாம். அதற்குள் நடிகரின் வாய்த்துடுக்கு இந்தப்பட வாய்ப்பைக் கெடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த நடிகர் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்த படம் அண்மையில் தயராகியிருக்கிறது.

அந்தப்படத்தைப் பார்த்தவர்கள், இந்தப்படத்துக்குப் பிறகு நீங்கள் எங்கேயோ போகப்போகிறீர்கள் என்று சொன்னார்களாம். உடனே சிலிர்த்துக்கொண்ட நடிகர், இந்தப்படத்தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டு, ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தை மாற்றி எனக்கு அதிகச்சம்பளம் கொடுக்கிற மாதிரி புதுஒப்பந்தம் போடவேண்டும் என்று சொன்னதாகத் தெரிகிறது. அப்படி அவர் கேட்ட தொகை சிலகோடிகள். இதனால் அதிர்ச்சியான தயாரிப்புத்தரப்பு உடனே பாபிசிம்ஹாவைத் தொடர்புகொண்டு கதையைச் சொல்லி அவருக்கும் பிடித்ததால் அவரே நாயகன் என்று அறிவித்துவிட்டார்களாம்.

அந்த அறிவிப்பைப் பார்த்து அதிர்ச்சியான நடிகர், தயாரிப்புத்தரப்பை சமாதானப்படுத்தி மறுபடி ஒரு படவாய்ப்பைப் பெறப் போராடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் தயாரிப்பாளரின் இந்த அதிரடி நடவடிக்கையைப் பற்றித் தெரிந்த மற்ற தயாரிப்பாளர்கள் இப்படித்தான் செய்யவேண்டும் என்று பாராட்டிக்கொண்டிருப்பதாகத் தகவல்.      

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்