ஆஃப் த ரெக்கார்டு!

லோக்கல் படத்தால துவண்டு போன மார்கெட் திரும்ப புத்தியிர் பெறும்னு ஸ்வீட் ஸ்டால் நடிகை ரொம்பவே கனவு கண்டாங்க. ஆனால் மூத்த வாரிசு நடிகை ஒரு பக்கம் தெலுங்கு, தமிழ், இந்தினு களம் இறங்க இன்னொரு பக்கம் கேடி நடிகை பிரம்மாண்ட அரசர் படம், மது பாட்டில் படம்னு செம பிசியாகிவிட்டனர். ஆனால் ஸ்வீட் ஸ்டாலுக்குத்தான் ஒரு வாய்ப்பும் வரவில்லையாம். வரவிருக்கும் தோரனை நடிகரின் படமாவது கை கொடுக்குமா என காத்திருக்கிறாராம் ஸ்வீட் ஸ்டால்.. எல்லாம் நேரம்!

ச்ச நடிகரின் பட்டத்துக்கு ஆசைப்பட்ட பன்ச் நடிகர் அதை வேண்டாம் என சொல்லிவிட்டாலும் இன்னொரு பக்கம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறாராம். மறைந்த மாபெரும் நடிகரின் புகழ் மீது பன்ச்சுக்கு லைட்டாக ஆசை வந்துள்ளது என கூறப்படுகிறது.. ப்ரோ உச்ச நடிகருக்கே புழுதில விட்டு புரட்டினாங்க ப்ரோ!

ன்னதான் பண்ராங்கப்பா கோட் நடிகரின் படக்குழு... படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் வருமா என எதிர்பார்த்துக் கிடந்தால் போற இடத்தில் எல்லாம் கேமரா சகிதமாக மிஸ்டர் கோட் ,போட்டோ எடுத்த புகைப்படங்கள் தான் கலர் கலரா வந்து விழுது. வழக்கம் போல படத்தோட பெயரே அறிவிக்காம படமெடுத்து வரும் படக்குழு பெயராவது ரிலீஸ் பண்ணலாமே என நெட்டிலும் உச்சஸ்தாயியில் கேள்விகள் பறக்க துவங்கிவிட்டன. சொல்லுங்க டாடி சொல்லுங்க படத்துக்கு பேரு என்ன என்றால் முதல் லெட்டர் ‘வி என்கிறார்களாம்.. படம் ரிலீஸுக்குள்ள மொத்த எழுத்தையும் ரிலீஸ் பண்ணிடுவீங்களா பாஸ்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!