பன்ச் நடிகர் படத்தில் தொழிலாளர்களுக்குச் சம்பளம் தரவில்லையா?

பன்ச் நடிகரின் இரண்டெழுத்துப்படம் ரிலீஸை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பல வாரங்கள் ஆகிவிட்டனவாம். ஆனாலும் படப்பிடிப்பில் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் சின்ன நடிகர்கள் உட்பட பலருக்கு இதுவரை சம்பளம் கொடுக்கப்படாமல் இருக்கிறதாம்.

பலமுறை அதைக்கேட்டும் கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்களாம். மிகவும் வலியுறுத்திக்கேட்கிறவர்களுக்கு இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விரைவில் இன்னொரு படத்தைத் தொடங்கவிருக்கிறார். அந்தப்படத்தில் உங்களுக்கு வேலை இருக்காது என்று சொல்கிறார்களாம்.

இதனால் அந்தப்படத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் வெளியில் சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்களாம். இவ்வளவு பெரியபடத்தைத் தயாரிக்கிறவர்களுக்கு, படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குச் சரியாகச் சம்பளம் தர மனமில்லாதது ஏன்? என்பது பெரியகேள்வியாக இருக்கிறது.

  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!