வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (21/08/2015)

கடைசி தொடர்பு:18:09 (21/08/2015)

அயிட்டம்டான்ஸ் ஆடிய சோனியாஅகர்வால்!

  சோனியாஅகர்வால் திரும்ப நடிக்க வந்த பிறகு நிறையப் படவாய்ப்புகள் வருமென்று எதிர்பார்த்தார். ஆனால் அவருடைய எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. மிகச்சில படங்களில் மட்டுமே அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அண்மையில் அவர் நடித்த பாலக்காட்டுமாதவ்ன் படடம வெளியானது, அதுவும் பெரிதாகப் போகவில்லை.

இதற்கிடையே தொலைக்காட்சிகளிலும் நடிக்கத் தொடங்கினார். ஆனாலும் பேசப்படுகிற நடிகையாக அவர் இல்லை. அதனால் அயிட்டம்டான்ஸ் எனப்படும் ஒரு பாடலுக்கு ஆடவும் முன்வந்திருக்கிறார். இங்கல்ல, கேரளாவில். அடுத்தவாரம் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் படம் குஞ்ஞாக்கபோபன் நாயகனாக நடித்திருக்கும் ஜம்னாபியாரி.

அந்தப்படத்தில்தான் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறாராம் சோனியாஅகர்வால். அந்தப்பாடலில் ஹீரோவும் இருக்கிறார் என்பதாலும் அந்தப்பாடல் பெரும்பொருட்செலவில் படமாக்கப்பட்டதாலும் அந்தப்பாடலில் ஆட ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.     

 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்