பளார் விட்ட நடிகை..நடந்தது என்ன? | Is that Actress Slapped Anyone?

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (24/08/2015)

கடைசி தொடர்பு:13:24 (25/08/2015)

பளார் விட்ட நடிகை..நடந்தது என்ன?

மீண்டும் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கி வருகிறார் கடைத்தெரு நடிகை. படப்பிடிப்புகளில் அதிகம் கலந்துகொள்கிறாரோ இல்லையோ ஆனால் பார்ட்டிகளில் அதிகமாக தென்படுகிறார் . எந்த பிறந்தநாள் பார்ட்டி என்றாலும் குட்டைப் பாவாடையுடன் குத்தாட்டம் ஆடி விடுகிறார் நடிகை. 

இதுதவிர்த்து கொஞ்சம் பூசினாற் போல் இருக்கும் நிலையில் இசை விழா, பார்ட்டிகள் என அம்மணி அணிந்து வரும் உடைகளோ சினிமாவை விட ஒரு படி மேல் கிளாமர் சொட்டுகிறது. இதில் சமீபத்திய கிளாமர் உடை நடிகை என்பதால் சில நேரங்களில் நடிகை அமரும் பாணிகளும் சர்ச்சையை உண்டாக்குகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு திரை சார்ந்த பிரபலத்தின் பிறந்தநாள் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட நடிகை ஒரு இளைஞரை பளார் என அறைந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்கிறார் நடிகை. எதுவாயினும் இந்த பார்ட்டி விஷயத்தால் நடிகையின் நடிப்பு வாழ்வில் ஏழரை ஆரம்பித்துள்ளது.

லேட் நைட் பார்ட்டி முடித்துவிட்டு சரியான நேரத்திற்கு அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு வருவதில்லை எனவும் சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கத் துவங்கிவிட்டன. ஏற்கனவே ஒரு பிரச்னை முடிந்து ரீஎண்ட்ரி ஆன நிலையில் மீண்டும் பிரச்னையா என கோலிவுட் வாசிகள் கேட்கத் துவங்கிவிட்டன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close