ஆஃப் த ரெக்கார்டு!

 பன்ச் நடிகர் சில வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்ட இயக்குநருடன் கொடுத்த நட்புப் படம் கொஞ்சம் வசூல் வந்தாலும் தயாரிப்புத் தரப்பில் நஷ்டம் தான் என சொல்லப்படுகிறது அதனை ஈடுகட்ட அடுத்து ஒரு படத்தில் தான் நடிப்பேன் என பன்ச் நடிகர் வாக்குக் கொடுத்ததையடுத்து, தயாரிப்பாளர் சமீபத்தில் நடிகரை சந்திக்க நான் ரொம்ப பிஸியென சொல்லி விட்டாராம் . அடுத்தவர்களுக்கெல்லாம் நல்லது நினைக்கிறார் தன் சொந்த படத்தில் நேர்ந்த பிரச்னைக்கு தீர்வு தர மறுக்கிறாரே என தயாரிப்பு இப்போது புலம்பி வருகிறாராம். சாப்பிடுறீங்களான்னு பேச்சுக்குத்தானே கேட்டாரு! 

ங்கே உச்ச நடிகர் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கையில் சம்மந்தமே இல்லாமல் இந்தி சர்ச்சை நடிகையை ஒப்பந்தம் செய்தது படக்குழு. சரி இந்த படம் தான் கனவாகிவிட்டதே. தெலுங்கு உச்ச நடிகரின் 150 வது படமாவது கிடைக்கும் என இங்கிருக்கும் பல நடிகைகள் படக்குழுவை துரத்தி வருகிறார்களாம். இப்போது இருக்கும் நிலையில் யார் அந்த அதிர்ஷ்டசாலி என போட்டிகள் வேறு துவங்கியுள்ளன. எனினும் நேற்று வந்த அந்த இந்திய அழகி போட்டி நடிகை தான் தேர்வில் முதன்மை இடத்தில் இருக்கிறாராம். எனினும் அப்பா படத்திலும் , மகன் படத்திலும் ஒரே நடிகையா அதெல்லாம் இருக்காது என நடிகைகள் மனதை தேற்றிக் கொண்டு சுற்றலில் உள்ளனர். மனச தேத்திக்குங்க தாயிகளா! 

மீபத்திய மதுபான படத்தில் முகம் சுழிக்கும் அளவிற்கு மது பாட்டில்கள் நிரம்பிய காட்சிகள் இருக்க போகும் இடமெங்கும் இயக்குநரை ஏன் இப்படி படம் எடுக்கிறீர்கள். உங்கள் அடுத்த படத்தின் பெயர் கூட குடி சம்மந்தமான தலைப்புதானாமே என கேள்விகளை கேட்க, எல்லாருடைய படத்திலும் தான் குடிகார சீன்கள், குடிக்கும் ஹீரோக்கள் இருக்கிறார்கள் ஏன் என்னை மட்டும் டார்கெட் செய்கிறீர்கள் என கொஞ்சம் சூடாகவே கேட்டுள்ளாராம் இயக்குநர். நெருப்பில்லாட்டி புகையாதுஜி! 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!