ஆஃப் த ரெக்கார்டு!

ஒரு வழியாக உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்துத் தலைகளையும் பார்த்து தேர்தலுக்கான நங்கூரத்தை எறிந்து வருகிறார் தோரணையான நடிகர். இதில் சமீபத்தில் முன்னாள் தலைவரையும் சந்தித்து அரசியல் சூட்சமங்களையும் கேட்டு அறிந்துகொண்டு வந்துள்ளாராம். இப்போ ஆளுங்கட்சி தரப்பில் இவரது அடுத்தடுத்த அடிகளைக் கண்டு கொஞ்சம் ஆடிப் போய்த்தான் உள்ளனர். அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!

நம்பர் ஒன் நடிகையை சமீபத்தில் இசை நடிகரின் படத்தில் நடிக்க கேட்க , வயதைக் காரணம் காட்டி படத்தை வேண்டாம் என நிராகரித்ததாகக் கூறப்பட்டு வந்தது. உண்மையை ஆராய்ந்ததில் இனி இரண்டாம் தர நடிகர்களை விடுத்து கொஞ்சம் பெரிய நடிகர்கள் படங்களை லபக்க வேண்டும் என்ற முடிவுதானாம். மேலும் சமீபத்தில் அந்த அண்ணன் நடிகருடன் நடித்து வெளியானஅந்த பேய்ப் படத்திற்குப் பிறகு முன்னணி நடிகர்கள் யார் படமும் கையில் இல்லை என்பதுதான் இதற்கு காரணம் என்கிறது ஒரு தரப்பு. நேத்து வந்த நடிகைகள்லாம் பெருந்தலைகள் படத்துல நடிக்கும் போது நாமலும் சும்மா இருக்கக்கூடாதுன்னு கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். இப்பத்தான் புரிஞ்சிதா!

ஒரு பக்கம் அப்பா இயக்குநர் படத்தை முடித்துக்கொடுக்க சொல்லுங்க என புகார் கொடுத்து கண்ணைக் கசக்க, இன்னொரு பக்கம் விரல் நடிகரோ நாங்கள் புகாரே கொடுக்கவில்லை. அது புகார்னே சொல்ல முடியாது சும்மா காட்டிக்கு ஒரு லெட்டர் எழுதுனோம்னு ஒரு பக்கம் வாயைத் திறக்க இப்போ அப்பாவின் மண்டை காய்கிறதாம்.என்னதான் இருந்தாலும் பழைய நட்பாச்சே விட்டுக்கொடுப்பாரா நடிகர் என்கிறது கோலிவுட் குறும்பு வட்டாரம். பூவ பூவுன்னு சொல்லலாம், நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!