ஆஃப் த ரெக்கார்டு!

மீப காலமாக தனது படங்கள் ஏதும் எதிர்பார்த்த வரவேற்புகளை தராத நிலையில் சூது நடிகர் பேசாமல் ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் என்ன என யோசித்து சில வருடங்களுக்கு முன்பு வந்த ரசிகப் பெருமக்களை அழைத்து ரசிகர் மன்றம் ஆரம்பிங்க ஒன்னும் தப்பில்லை என கூறியுள்ளாராம். இதற்குத்தானே ஆசைப்பட்டாய்....

பிரம்மாண்ட இயக்குநர் இயக்க உள்ள உச்ச நடிகரின் பாகம் இரண்டு படத்திற்கு தற்போது பீம நடிகரும் இல்லையாம். ஹாலிவுட்டில் அல்லது உலக மகா நடிகர் எவரேனும் தான் வேண்டும் என அடம்பிடிக்கிறாராம் பிரம்மாண்டம். இப்போது தயாரிப்புத் தரப்பு கையை பிசைந்து வருகிறார்கள். எல்லாம் சம்பளத்தை நினைத்துதான். உள்ளூர் வாசிகளுக்கே புழுதியில் புரள வேண்டியுள்ளது. இப்போது உலக மகா நடிகர் எனில் எங்கு போவது என தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்களாம். யானையக் கட்டினா தீணி போட்டு தான ஆகணும்!

 

கோட்டு நடிகர் எந்த விழாவிலும் கலந்துகொள்ளவில்லை என ஏற்கனவே பிரச்னை இருக்க இப்போது காமெடி நடிகர் ஒருவரின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்துள்ளார். பாருங்க எங்க கோட்ட எவ்வளவு எளிமையா இருக்காருன்னு சிலர் மார் தட்டினாலும், என்னப்பா இது முக்கியமான நிகழ்வுக்கெல்லாம் வர மாட்டேங்கறாரு இதெல்லாம் மட்டும் பண்றாரே என கோலிவுட்டின் இன்னொரு தரப்பு சொல்லத்துவங்கியுள்ளது. நியாயம் தானே...

ரீமேக் இயக்குநரின் சமீபத்திய படம் சக்கை போடு போட படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய பேசி வருகிறாராம் இயக்கம். இதுக்கு நடுவில் மற்ற மொழிகளில் தனது கேரக்டருக்கு நம்மையே கேட்பாரா அல்லது வேறு நடிகைகளா என யோசித்து வருகிறாராம் நம்பர் ஒன் நடிகை. அதுக்காக லெமூரியா கண்டத்துல ரீமேக் பண்ணாலும் உங்களையே ஹீரோயினாக்கணும்னா எப்படி ஜீவா வண்டி ஓடும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!