பிரபல பாடகரை மனம்நோக வைத்திருக்கும் காதல்?

பிரபல பின்னணிப்பாடகரின் மகனும் ஒரு பின்னணிப்பாடகர்தான். அவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். நன்றாகப் போய்க்கொண்டிருந்த அவர்களுடைய வாழ்க்கையில் அண்மையில் கடும் சூறாவளி வீசத்தொடங்கியிருக்கிறதாம்.

பாடகரின் காதல் மனைவியை ஒல்லிஇசையின் உறவினரும் நடிகருமான ஒருவர் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கிவிட்டாராம். பாடகரின் மனைவியும் சம்மதம் சொல்லிவிட்டதோடு பாடகரை விட்டுவிட்டு நடிகரோடு சேர்ந்து வாழத்திட்டமிடுவதாகத் தெரிகிறது.

விசயம் தெரிந்த நடிகரின் நண்பர்கள், பாடகரின் குடும்பம் மற்றும் உச்சநட்சத்திரம் உட்பட பலர் தலையிட்டும் சிக்கல் தீரவில்லையென்று சொல்லப்படுகிறது. இதனால் பாடகர் மிகவும் மனம் நொந்திருப்பதாகத் தகவல்.   
 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!