ஆஃப் த ரெக்கார்டு!

மலையாளத்தில் உச்ச நடிகர் நடித்த விளம்பரத்திற்கு பஞ்சாயத்து கிளம்பி வழக்கு போட தற்போது விளம்பரத்தை டார்கெட் வைத்து நடித்து வரும் பல நடிகர்கள், நடிகைகள் கொஞ்சம் பயத்தில் உள்ளனர். இதில் பல ஹீரோக்கள் கூல்ட்ரிங்ஸ் விளம்பரத்தில் வேறு நடிப்பதால் கொஞ்சம் வயிற்றில் புளி கரையத்தான் செய்துள்ளது. உச்சத்துக்கே பஞ்சாயத்தா...

சமீபத்தில் பூமி நாயகனின் ரசிகர்கள் காமெடி ஹீரோவை அடித்ததாக செய்திகளும் வீடியோக்களும் பரவ, என்னதான் பஞ்சாயத்து பாஸ் என கோலிவுட்டின் குறும்புகளிடம் கேட்க, அது ஒண்ணுமில்லீங்க பூமியோட மகள ஏதோ ஒரு சேனல்ல நடந்த நிகழ்ச்சில ஹீரோ கிண்டல் பண்ணியிருக்காரு. அதனாலதான் நடிகர ரசிகர்கள் ரவுண்டு கட்டிட்டாங்க என்கின்றனர். அதுக்காக ஒரு வருஷம் கழிச்சா? என்றால்,என்னத்த சொல்றது என்கிறது குறும்பு வட்டாரம். இதுதான் உங்க டக்கா பாஸ்!என்னப்பா ஆளாலுக்கு விளம்பரத்துக்கு வராங்க என்ன சேதின்னு கேட்டா. எல்லாம் சம்பளம் பண்ற வேலை தான். 10 நாட்கள் தொடர்ச்சியா படத்துல நடிச்சா கிடைக்கற சம்பளம் ஓரிரு நாட்கள்ல இதுல கிடைக்கிதே. நம்பர் ஒன் நடிகை, பூமி நாயகன், ஏன் சமீபத்துல வெற்றி நடிகர் நடிச்ச வேட்டி விளம்பரம் கூட இப்போ டிவிக்களில் டாப். என்னதான் சொல்லுங்க யாரலையும் அண்ணன், தம்பி, கூடவே அண்ணி இப்படி இந்த ஃபேமிலிய மட்டும் அடிச்சிக்கவே முடியாது. காசு, பணம் துட்டு ,மணி, மணி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!