ஆஃப் த ரெக்கார்டு!

சினிமாவுல மட்டுமில்லாம விளம்பரத்துலயும் நம்பர் ஒன் நடிகை தான் நம்பர் ஒன். படத்துக்கு எப்படி கோடிக்கணக்குல சம்பளம் கேக்கறாங்களோ அதே பாணியில விளம்பரங்களுக்கும் சம்பளம் தாராளமாக் கேக்குறாங்களாம். சமீபத்துல நகைக் கடை விளம்பரத்துல தலை காட்டின நடிகைக்கு சம்பளம் 4 கோடின்னு பேசிக்கிறாங்க. அதுல வீடு வாங்கி, பிடிச்ச இயக்குநருக்கு அன்பளிப்பா குடுத்துருக்காங்களாம். நெருப்பில்லாம புகையாது!

ப்பல்லாம் ஹீரோயின்கள் நிறையப் பேர் கார் ஓட்டக் கத்துகிட்டு தங்களோட காரை தாங்களே ஓட்டிக்கிறாங்களாம். இதுல ஒல்லி பெல்லியான பிரம்மாண்ட நடிகையும் அடக்கம். என்ன ஆச்சு? அப்படின்னு விஜய்சேதுபதி ரேஞ்சுல கேட்டா. டிரைவர்கள் அப்பப்ப போதையில் உளறிக் கொட்டிடுறாங்க, இதனால் பல ரகசியங்கள்  வெளில போயிடுது, அதைத் தடுக்கத்தான்  இந்த ஏற்பாடு என்கின்றனர் கோலிவுட் குறும்பர்கள். இதெல்லாம் பெருமையா?....கடமை!

மீபத்துல வெளியான பன்ச் நடிகரோட ரெண்டெழுத்துப் படம் எதிர்பார்த்த வரவேற்புகளைப் பெறாமப் போக நடிகர் செம அப்செட்.  போன வருஷம் வெளியான அந்த அண்ணன் பட லிஸ்ட்ல இதுவும் சேர்ந்துடுமோன்னு பன்ச்சுக்கு பயம் வந்துடுச்சு. இனிமே கதைய கொஞ்சம் யோசிச்சுத் தான் தேர்வு செய்யணும் என்கிற முடிவு எடுத்ததோட இப்ப எடுத்துக்கிட்டு இருக்க படத்தோட இயக்குநர் கிட்டயும் சில பல கோரிக்கைகள், கண்டீஷன்களை பன்ச் போட்ருக்காராம். அப்ப கூடிய சீக்கிரம் இயக்குநர் புலம்பல்னு நியூஸ் வரும்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!