சண்டைபோட்டுக் கொண்ட சூப்பர் ஸ்டார்கள், அதிர்ச்சியில் சினிமா உலகம்!

பாலிவுட்டின் டாப் கான் நடிகர்களில் இருவர் தங்களது நல்ல நட்பை முறித்துக் கொண்டுள்ளதால் பாலிவுட் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்தப் படம் குறித்து ஏலியன் கான் நடிகர் கருத்து சொல்லி கூடவே  படத்தின் ஹீரோ கிக் கான் நடிகரை கொஞ்சம் சீண்டியுள்ளார்.

மும்பையின் பிரபல பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக்கொள்ள, இது சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதற்கு முதல் காரணம் கிக் நடிகரின் அடுத்த இஸ்லாமிய பெயர் கொண்ட படமும் , ஏலியன் கான் நடிகரின் விளையாட்டு சார்ந்த படமும் கிட்டத் தட்ட ஒரே பாணியில் இருப்பதால் தான் என்கின்றனர். இந்நிலையில் பார்ட்டியில் இந்தியா-பாக் படம் குறித்து ஏலியன் ”நல்ல படம் கிக் நடிகர் பின்னியுள்ளார்” என சொன்னவர் கூடவே ”இனியாவது இது போன்ற படங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். கதைகளைத் தேர்வு செய்கையில் முதிர்ச்சி காட்டி கடின உழைப்பைக் கொடுக்க வேண்டும்” என நேராகவே கூறிவிட்டார்.

இதனையடுத்து என்னதான் பக்குவமான நடிகர்கள் என்றாலும் சக நடிகர் குத்தினால் சும்மா இருப்பார்களா, உடனே கிக் நடிகர், ”எனக்கு ஏலியன் போல் கடின உழைப்பு இல்லைதான். ஆனால் தனக்கு நல்ல வாய்ப்புக் கொடுத்த இயக்குநர்கள் தயாரிப்பாளர்களை கொஞ்சம் அவ்வப்போது பாராட்டி தக்க வெகுமதி செய்தால் நன்று அது ஏலியனுக்கு நல்லதாக அமையும்” , மேலும் ’ஃபேக்’ என கொஞ்சம் வேகமாக கத்தியதாகவும் கூட சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஃபேக் (போலி) என்ற வார்த்தை ஏலியன் காதில் விழ கொஞ்சம் கண்கலங்கித்தான் போயுள்ளாராம் நடிகர். இதனால் பார்ட்டி மொத்தமும் பஞ்சாயத்துக் களமாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் சண்டையில் கிங் கான் நடிகர் குளிர் காய்கிறாரோ என அவரையும் வம்பிழுத்து வருகிறார்கள் இவ்விரண்டு கான்களின் ரசிகர்கள். அந்தக் கடலே வத்திப் போனா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!