ஆஃப் த ரெக்கார்டு!

ரு பக்கம் மகாபாரத அணி இன்னொரு பக்கம் பழைய அணி என, கோலிவுட் தேர்தல் கொந்தளிப்பில் இருக்கிறது. எனினும் சொந்தப் பகையை வைத்துக்கொண்டு குடும்பமாக ஒன்று கூடி தோரணை நடிகரையும் அவரது குழுவையும் புரட்டி எடுக்கிறார்கள் என்றால் இடையில் வம்பாக ஏன் இவரும் இணைந்து கொண்டு சீறிப் பாய்கிறார் என பலரும் விரல் நடிகர் குறித்து பேசத்துவங்கிவிட்டனர். ஆளாளுக்கு நாய், நரி என்று சொல்லிகொண்டிருந்தால் இதென்ன தேர்தலா இல்லை சந்தைக் கடையா என கேட்கிறது இன்னொரு தரப்பு. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!

ருட்டுல படமெடுக்கற இயக்குநரோட அடுத்த  படத்துல மலையாள வாரிசு நடிகருக்குப் பதிலா இப்போ புதுசா ஓரெழுத்து பூச்சிப் பட நடிகர் நடிக்கப் போறதா தகவல்கள் கசிஞ்சுருக்கு. ஆமா மலையாள வாரிசு நடிகர் இவர விட எந்த வகையில குறைஞ்சிட்டாராம் அப்படின்னு கோலிவுட் குறும்பு குரூப் காதக் கடிச்சா, எல்லாம் விளம்பரம் தான். படம் தெலுங்கு, தமிழ் ரெண்டுலயும் உருவாகுது அதுக்கு தெலுங்கு, தமிழ் ரெண்டுக்கும் பரிச்சயமான முகம்னா, பூச்சி நடிகர் மாதிரி ஒருத்தர்தான் கரெக்டா இருப்பாருன்னு சொல்லிக்கிறாங்க. ஆனாலும் ரசிகைகள் மலையாள நடிகருக்குத்தான அதிகம். அது உங்களுக்குத் தெரியுது ஆனா ஜனங்களுக்குத் தெரியலையே! 

ம்பர் ஒன் நடிகை வீட்டில் ரெய்டு என களேபரம் ஆனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் விளம்பரம், கொஞ்சம் விழாக்கள், பேட்டிகள் என தலை காட்ட ஆரம்பித்தேன் அது பிடிக்கவில்லையா என்ற ரீதியில் புலம்பிய நடிகை மீண்டும் எல்லாத்துக்கும் தடா  போட ஆரம்பித்து விட்டாராம். பேட்டி, விழாக்கள், என யாரேனும் தேடி வந்தால் வாசலுடன் அனுப்பி விடுகிறாராம். எல்லாம் மாயை!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!