ஆஃப் த ரெக்கார்டு!

ராணி படத்தில் நடிக்கும் டீச்சர் நடிகை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உயரமான தெலுங்கு நடிகருடன் மிகவும் நெருக்கம் காட்ட ,ரெண்டு படத்துல சேர்ந்து நடிச்சாங்கல்ல அதுவா இருக்குமோ என கொஞ்சம் பத்தவைத்தால். இல்ல இவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளாவே இப்படித்தான் ஜோடி போட்டு சுத்துறாங்க. திடீர்னு அவங்களா சொல்லுவாங்க என்கிறார்கள். ஆமா விஷயம் நடிகரோட முன்னாள் காதலிக்குத் தெரியுமா? நமக்கேன் வம்பு!

டல்ட்ஸ் ஒன்லி படமாக வெளியான அந்த நடிகைகள் பெயர் கொண்ட படத்தில் நடித்த சந்தோஷமான நடிகைக்குப் படத்தின் கதைப் போறபோக்கு என்னவென்றே சரியாகத் தெரியாதாம். மேலும் எதற்கு அந்த லவ்வர் பாய் நடிகர், செட்டிற்கு வந்தார் ஏன் அந்த சீன் என்று கூடத் தெரியாதாம். படம் வந்த பிறகுதான், தான் நடித்த அந்த மேட்டர் காட்சி புரிந்ததாம். தற்போது பலரும் நடிகையை பிட்டுப் பட நடிகை எனக் கூறுவதாக சொல்லி புலம்பி வரும் நடிகை யாராவது யூத் ஃபுல் ஸ்டோரி என வந்தால் முழுமையாகக் கேட்டுப் புரிந்துகொண்டு தான் ஓகே சொல்லுவேன் என்கிறாராம். குழந்தப் புள்ளைய இப்படி ஏமாத்தீட்டீங்களே!

ப்போதெல்லாம் நடிகைகள் கிரீம், சோப்பு விளம்பரம் எனத் தேடி வந்தால் சம்மதிக்கவே தயக்கம் காட்டுகிறார்களாம். இப்படித்தான் சமீபத்தில் வீரமான வெள்ளை நடிகையை பெரும் தொகைக்கு ஃபேர்னஸ் க்ரீம் விளம்பர நிறுவனம் ஒன்று நடிக்க வேண்டி அழைக்க, எவ்வளவு கொடுத்தாலும் முடியாது என சொல்லிவிட்டாராம். காரணம் எங்கே கிரீமைப் பயன்படுத்தி அந்த நடிகை சொல்லித்தான் போட்டேன் அதனால் பின் விளைவு எனக் கேஸ் போட்டு விடுவார்களோ என்ற பயம் தான் காரணமாம். நம்ம மக்கள் ரொம்ப விவரம்டோய்!

ல்லிபிச்சான் நடிகர் கையில் தமிழ் படங்களே அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியில் வருடத்திற்கு ஒருமுறையேனும் இந்திப் படம் கொடுக்க வேண்டும் என்ற கனவில் கொஞ்சம் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனே களம் இறங்கிய நடிகர் தான் நடித்து வரும் யானை இயக்குநர் படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறாராம். அதனால் இந்திக்கு ஏற்ப ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்யச் சொல்லி குடைந்தெடுக்கிறாராம் நடிகர். இயக்கமும் பொருத்துகொண்டு அனைத்தையும் செய்து வருகிறாராம். யானையக் கட்டினா தீணிப் போட்டுத்தான ஆகணும்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!