ஆஃப் த ரெக்கார்டு! | Off The Record!

வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (19/10/2015)

கடைசி தொடர்பு:12:39 (19/10/2015)

ஆஃப் த ரெக்கார்டு!

டந்து முடிந்துள்ளது தேர்தல். பல முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களிக்க வராமல் டிமிக்கிக் கொடுக்க அதில் கோட் நடிகர் வராதது இன்னும் பெரிய பிரச்னையாக இணையத்தில் உருவெடுத்துள்ளது. சரி அவருக்குதான் ஏதோ காயமாம்ல என்றால். அதெல்லாம் பெரிய அடியெல்லாம் இல்லை. சின்னக் காயம் தான். தனக்கு ஒரு பிரச்னை என்ற போது எந்த அமைப்பு எனக்காக வந்து நின்றது? எனக்கு எந்தச் சங்கமும் வேண்டாம் என்றிருக்கிறாம் மிஸ்டர் கோட். ஆனாலும் நடிகர் எந்த நிகழ்ச்சிக்கும் பெரிசா வருவதே இல்லையே பிறகெப்படி அமைப்பு பின்னால் நிற்கும் என்கிறது இன்னொரு தரப்பு.. யார் சொல்றத நம்பறதுன்னு தெரியலையே நியாயமாரே!

பூமி நடிகரும், உச்ச நடிகரும் பெயர் மாற்றம் குறித்துப் பேச இப்போது யார் சொன்ன கோரிக்கையை நோக்கிச் செயல்படுவது என்ற ரீதியில் ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். எனினும் எந்த மாற்றமும் இப்போதைக்கு இல்லை அதைவிட முக்கியமான நடவடிக்கைகள் நிறைய இருக்கின்றன என தோரணை தரப்பு கூறியுள்ளது. அதென்னமோ உண்மை தான்.

கோட் நடிகர் வரவே இல்லை, இன்னொரு பக்கம் பன்ச் நடிகர் எந்தக் கருத்தும் சொல்லவே இல்லை. சினிமாவோட மிகப்பெரிய தூண்களாக இருந்துகிட்டு இப்படி அமைதியா இருந்தா எப்படி என்றால் எல்லாம் ஆளுங்கட்சி உள்ளே தலையீடு இருப்பதனால் தான் பன்ச் தலையீடே இலை என்கின்றனர். மேலும் கோட் நடிகர் பிரச்னை தான் நமக்கு தெரிந்த ஒன்றாயிற்றே. அது இருக்கட்டும் ஏன் நடிகைகள் பலரும் வரவில்லை என்றால் முதலில் அவர்கள் எல்லாம் வாக்களிக்க வேண்டுமானால் தமிழ் மண்ணுக்குச் சொந்தமானவர்களாக இருக்க வேண்டுமே . இதில் உறுப்பினர் அட்டை, புதுப்பித்தல் என பல சிக்கல்கள் வேறு எப்படி வருவார்கள் என இன்னொரு பேச்சும் அடிபடுகிறது,. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்