ஆஃப் த ரெக்கார்டு!

அஞ்சாத நடிகர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நம்பர் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறதாம். ஏற்கெனவே முடிந்திருக்கவேண்டிய படப்பிடிப்பு இன்னும் தொடரக்காரணம் இருக்கிறதாம். இந்தப்படத்தின் கதையும் அண்மையில் வந்த இன்னொரு படத்தின் கதையும் ஒரேமாதிரி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடிப்படையைக் கதையை மாற்றமுடியாவிட்டாலும் காட்சிகளிலாவது மாற்றம் செய்யலாம் என்று முடிவு செய்து சில காட்சிகளைத் திரும்ப எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இரண்டெழுத்துப்பெயர் கொண்ட தயாரிப்பாளர், கடந்த சில ஆண்டுகளாக படத்தயாரிப்பை விட்டுவிட்டு அரசநிறுவனத்தில் எல்லாமுமாக இருந்தார். அந்த நிறுவனம் தயாரிக்கும் படங்கள், வாங்கி வெளியிடும் படங்கள் ஆகிய எல்லாமே இவருடைய விருப்பப்படிதான் நடக்கும் என்று சொல்லப்பட்டது. இவருக்கு வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுகிறார் மற்றவர்களுக்குச் சிக்கல் செய்கிறார் என்கிற விமர்சனங்கள்கூட வந்ததுண்டு. இப்போது அரசநிறுவனத்துக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் தனியாக ஓர் அலுவலகம் தொடங்கி தாமே மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.

ஒரு படத்தை வெளியிடுவதற்குள்ளேயே நூடுல்ஸ்ஸான விரல்நடிகர், அடுத்துத் தயாரித்து நடித்துவரும் படமும் வெளியாவது சந்தேகமே. அந்தப் படத்தில் நடித்திருக்கும் நம்பர் நடிகைக்குப் பேசப்பட்ட சம்பளத்தில் பாதியே கொடுத்திருக்கிறார்களாம். மேலும் விரல் நடிகர் தனியாக 30 லட்சம் தருவதாகச் சொல்லிய பணமும் தரவில்லையாம். இன்னும் இரண்டு பாடல்கள் பாக்கியிருப்பதால் நடித்துத் தாருங்கள், மீதித் தொகை அனைத்தையும் தந்துவிடுகிறேன் என்று கேட்டாலும், முடியவே முடியாது என்று கறாராக சொல்லிவிட்டாராம் நம்பர் நடிகை. விரல் நடிகருக்கு எந்தப் பக்கம் திரும்புனாலும் அடிமேல் அடிவிழுந்து வருகிறது! பாவம் யார்(நடிகைகள்) விட்ட சாபமோ!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!