ஆஃப் த ரெக்கார்டு! | Off The Record!

வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (27/10/2015)

கடைசி தொடர்பு:12:37 (27/10/2015)

ஆஃப் த ரெக்கார்டு!

கோட் நடிகரின் படத்துக்கு வைக்கப்பட்ட பெயருக்கு பலரும் பல கருத்துகளையும் விமர்சனங்களையும் கொடுத்துவர சத்தமே இல்லாமல் பன்ச் நடிகருக்கு ஆப்பு வைத்துள்ளார் மூத்த வாரிசு நடிகை. பன்ச் நடிகரின் இரெண்டெழுத்துப் படத்துக்கும் , கோட் நடிகர் படத்துக்கும் இடையில் இருக்கும் ஒரே நபர் வாரிசு நடிகையே என்ற ரீதியில் படக்குழு ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்துள்ளது. படத்தின் பல தலைப்புகள் பரீசிலனையில் இருக்க இந்தப் பெயரை தேர்வு செய்யுங்கள் நான் ஏன் சொல்கிறேன் என்பது உங்களுக்கு விரைவில் புரியும் எனக் கூற கடைசியில் உச்ச நடிகரின் படம் முழுக்கவே கோட் நடிகர் தலைப்பு இடம்பிடித்திருந்திருப்பது பின்புதான் தெரியவந்துள்ளது.. இங்கே கோட் நடிகரின் படக்குழு செம ஹேப்பியில் இருக்க, அங்கே பன்ச் நடிகர் செம கடுப்பில் இருக்கிறாராம். என்னம்மா நீ இப்படி பண்ணீட்டியேம்மா!

தேர்தல் நடந்து முடிந்த கையோடு ஜெயித்த அணி கூட பத்திரிகையாளர் சந்திப்பு வைத்தபாடில்லை. ஆனால் முன்னாள் தலைவர் மீடியாக்களைக் கூட்டி கண்ணீர் சிந்திவிட்டு வெளிநாட்டுக்குப் பறந்துள்ளார். மேலும் தலைவரின் மைத்துனரும் தற்போது தமிழகத்தில் இல்லையாம். அதே போல் அமைப்புல ஏதாவது பிரச்னை எனில் இனி நாம் கலந்துகொள்ளக் கூடாது எனவும் குடும்பமாக ஒண்ணு கூடி முடிவெடுத்துள்ளனராம். வெற்றியும் தோல்வியும் வீர்னுக்கு ஜகஜம்பா...

லியன் கான் நடிகருக்கும், கிக் நடிகருக்கும் இடையில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுக்கொண்டே போகிறது. மேலும் சமீபத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்குப் பட இயக்குநரின் அப்பா எழுத்தில் வெளியான இந்தியா- பாகிஸ்தான் இந்திப் படத்தில் நடிக்க முதலில் ஏலியன் கான் நடிகரிடம் தான் கேட்கப்பட்டதாம். அவர் நிராகரிக்கவே அதில் கிக் கான் நடிகர் நடித்துள்ளார். எனினும் இந்த இந்தியா- பாக் படம் முழுக்க முழுக்க என் உழைப்பு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. மேலும் என்னைப் பொது இடத்தில் வைத்து கருத்து விமர்சனம் செய்த அந்த கானை என்னால் மன்னிக்கவும் முடியாது எனக் கூறிவிட்டாராம் கிக் கான். பக பகதான் பாம்புத் தீண்டியே தீரும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close